(சுக்கிரீவன் இடபன் முதலான வானர வீரர்களை நோக்கிக்);கொற்ற வாகையினீர் -வெற்றிக்கான வாகைமாலையை அணிவதற்கு உரியவர்களே! வெற்றி வானரம் வெள்ளம் இரண்டொடும் -(நீங்கள்) வெற்றி பெறும் தன்மையுள்ள இரண்டு வெள்ளம் வானர சேனையோடும்;சுற்றி ஓடித்துருவி - (பல இடங்களில்) அலைந்து திரிந்து (சீதையைத்) தேடி;ஒரு மதி முற்றுறாதமுன் -ஒரு திங்கள் கழிவதற்குள்ளே;இவ் இடை முற்றுதிர் - இங்கே திரும்பி வந்து சேருங்கள்;எனக் கூறினான் -எனச் சொல்லினான். நீங்கள் தனித் தனியே இரண்டு வெள்ளம் வானரப் படையோடு நான் உங்களுக்குக் குறித்த திசைகளுக்குச் சென்று சீதையைத் தேடி ஒரு திங்களுக்குள் இங்கு வந்து சேரவேண்டுமென்று சுக்கிரீவன் ஆணையிட்டான் என்பது. வாகை -ஆகுபெயர். 11 தென்திசை செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல் 4458. | 'ஈண்டுநின்று எழுந்து, ஈர் - ஐந்து நூறு எழில் தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால், நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ வேண்டும் விந்தமலையினை மேவுவீர். |
(தென் திசைக்குச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன்); ஈண்டு நின்று எழுந்து -(நீங்கள்) இங்கிருந்து புறப்பட்டு;எழில் தூண்டு சோதி -அழகு மிகுந்து ஒளி வீசுகின்ற;ஈர் ஐந்து நூறு கொடு முடி தோன்றலால் -ஆயிரஞ் சிகரங்கள் காணப்படுவதால்;நீண்ட நேமி கொல் ஆம் என -பெரிய வடிவு கொண்ட திருமால்தானோ என்று;நேர் தொழவேண்டும் -எதிரே சென்று தொழுவதற்குரிய;விந்த மலையினை - விந்திய மலையை;மேவுவீர் -முதலிலே சென்று சேருங்கள். ஆயிரங் கொடுமுடிகளையுடைய விந்திய மலைக்கு ஆயிரம் முடிகளையுடைய திருமாலை உவமையாக்கினார். நேமி - ஆகுபெயர். 12 4459. | 'தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும் ஆடுகின்றது, அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது, பல் மணியால் இருள் ஓடுகின்ற நருமதை உன்னுவீர். |
அவ்வரை தேடித் தீர்ந்தபின் -அந்த விந்திய மலையில் சீதையைத் தேடி முடித்த பின்பு;தேவரும் ஆடுகின்றது -தேவர்களும் வந்து நீராடப் பெறுவதும்;அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது -(வெள்ளத்தால் அடித்து வரப் பெற்ற மலர்களிலுள்ள தேனைப் பருகி அந்தக் களிப்பினால்) வண்டுகள் பஞ்சமம் என்ற சுரத்தைப் பாடப் பெறுவதுமான;பல் மணியால் இருள் ஓடுகின்ற -(அங்குள்ள) பலவகையான |