பக்கம் எண் :

532கிட்கிந்தா காண்டம்

     பூம்பொழில் -மலர்கள் நிறைந்த (முண்டகத்துறை என்னும்) அச்
சோலையானது;ஞாலம் நுங்குறும் -உலகத்தவரால் அனுபவிக்கப் படுகிற;
நல் அறத்தோர் பொருள் போல -
சிறந்த தரும சிந்தையுள்ள வர்களின்
செல்வம் போல;நின்று பொலிவது -நிலைபெற்று விளங்குவது;சீல
மங்கையர் வாய் என -
நல்லொழுக்கமுடைய மாதர்களின் வாயிதழ் போன்று;
தீம் கனி -
இனிய பழங்கள்;காலம் இன்றிக் கனிவது -(இன்ன காலமென்று
இல்லாது) எந்தக் காலத்திலும் பழுக்கப் பெறுவது;காண்டிர் -(அதனைச்)
சென்று காணுங்கள்.

     இம் முண்டகத்துறைக் கண்ணுள்ள மரங்களெல்லாம் சிறந்த பயன்மரங்கள் என்பதும், எந்தக்காலத்தும் மாறாது இனிய கனி தருவன என்பதும் குறிக்கப் பெற்றன.

     ஞாலம் - இடவாகுபெயர்.  சிறந்த அறச் சிந்தனையுள்ளவர்களின்
செல்வம் பெருகி உலகத்துள்ளார்க்கும் பயன்படும்.  கனிபோன்ற வாய்
என்னாமல் மகளிர் வாய் போன்ற கனி என்றது எதிர்நிலையணி.          18

4465.'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி;
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி;
சயன மாதர் கலவித்தலைத் தரும்
பயனும், இன்பமும், நீரும், பயக்குமால்.  *

     (அங்குள்ளவர்கள்) நயனம் நன்கு இமையார் -கண்களை நன்றாக
இமைக்கமாட்டார்கள்;நனி துயிலார் -நன்றாகத் தூங்கமாட்டார்கள்;
அருக்கனுக்கு -
சூரியனுக்கு;அவ் வழி அயனம் இல்லை -அவ்விடத் தில்
நுழைவதற்குரிய வழி கிடையாது;சயனமாதர் கலவித் தலைதரும் பயனும் -
படுக்கையில் மகளிரின் சேர்க்கையால் உண்டாகின்ற போக இன்பத்தையும்;
இன்பமும் -
பெருமகிழ்ச்சியையும்;நீரும் -நீர்ச் செழிப்பையும், பயக்கும் -
(எப்பொழுதும்) உண்டாக்கும்.

     ஆல்: அசை. கண்ணிமையாமையும், துயிலாமையும் தேவர்களுக்கு
இயல்பு.  தேவர்கள் வாழுமிடமாயுள்ளது அப்பொழில்.  அது சூரியனின்
கதிர்களும் உட்புகாதவாறு மரங்களால் செறிந்துள்ளது.                 19

4466. ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது -
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம்.

     ஆண்டு இறந்தபின் -அந்தப் பொழிலைக் கடந்த பின்பு;அந்தரத்து
இந்துவைத் தீண்டுகின்றது -
ஆகாயத்தில் மதியைத் தொடுவதும்;செங்
கதிர்ச் செல்வனும் -
சிவந்த கிரணங்களைச் செல்வமாக வுடைய சூரியனும்;
ஈண்டு உறைந்து அலது -
இம் மலையில் தங்காமல்;ஏகலம் என்பது -
அப்பால் செல்லமாட்டோம் என்று நினைத்தற்கு