நிறத்தைக் கண்டு) வெட்கப்பட்டு;எங்கும் வெளிப்படா ஒளிக்கும் -எந்த இடத்தும் தலைகாட்டாமல் மறைந்து விடும்;மலர் நிறம் சமழ்க்கும் - தாமரை மலரின் நிறமும் நாணும்;எந்நிறம் உரைக்கேன் -(இவ்வாறுள்ளது என்றால்) வேறு எந்த நிறத்தை உவமையாகச் சொல் வேன்? வேண்டின் - (எப்படியாவது) உவமை கூறியேயாக வேண்டும் என்றால்;தன் நிறம் தானே ஒக்கும் -(சீதையின்) நிறம் தனக்குத் தானே ஒப்பாகும். மாந்தளிர், பொன், இரத்திரனங்கள், மின்னல், தாமரை மலர் என்பவற்றை மகளிர் மேனி நிறத்துக்கு உவமை கூறுதல் கவி மரபு. ஆனால் இவற்றினும் சீதையின் மேனி நிறம் அழகில் விஞ்சியிருக்கும் என்பது. ஏதுத் தற்குறிப்பேற்றவணி. அன்றே: ஈற்றசை, தேற்றமும் ஆம்; மற்றை: அசை, மின்னல் இயல்பாகத் தோன்றி மறைவதைச் சீதையின் மேனி நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு மறைவதாகக் கூறினான். சமழ்த்தல்:நாணுதல். 65 4512. | ' ''மங்கையர் இவளை ஒப்பார், மற்று உளார் இல்லர்'' என்னும் சங்கை இல் உள்ளம் தானே சான்று எனக் கொண்டு , - சான்றோய்! - அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து, அருகு சார்ந்து, திங்கள் வாள் முகத்தினாட்கு, செப்பு' எனப் பின்னும் செப்பும்; |
சான்றோய் -நற்பண்புகள் நிறைந்தவனே!இவளை ஒப்பார் -சீதைக்கு நிகரான;மற்று மங்கையர் உளார்இல்லர்என்னும் -வேறு பெண்கள் எவரும் இல்லை என்னும்படி;சங்கை இல் உள்ளம் தானே -ஐயமில்லாத உனது மனத்தையே;சான்று எனக் கொண்டு - சாட்சி யாகக் கொண்டு;அங்கு - அச் சீதையிருக்கும் இடத்தில்;அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து -அவளது தன்மை முழுவதையும் தெளிவாக ஆராய்ந்து அறிந்து (துணிந்த பின்பு);அருகு சார்ந்து -அவளுக்குப் பக்கத்தில் போய்;திங்கள் வாள் முகத்தினாட்கு -முழுமதி போன்ற ஒளி நிறைந்த முகத்தையுடைய அச்சீதைக்கு;செப்பு -(நான் கூறும் அடையாள மொழிகளைச்) சொல்வாய்; என - என்று;பின்னும் செப்பும் -மீண்டும் கூறுவான். அவள் உருவிலக்கணங்களால் உவமை நீங்கியவள் என்பதைக் காட்சியளவையால் மட்டுமல்லாமல் ஐயம் நிகழ்ந்துவிடத்து உள்மனம் எதைத் துணிகின்றதோ அதனையே உறுதியெனக் கொண்டு, கொண்டு தெளிவாய் என்றான் என்பது. சான்றெனக் கொண்டு சான்றோய் - சொல்நயம். 4479 ஆம் பாடல் தொடங்கி 4512 ஆம் பாடல் முடியவுள்ள பாடல்கள்பற்றி மனத்தே தோன்றும் ஒரு கருத்தோட்டத்தைப் புலப்படுத்துவது சரியானதென்றே தோன்றுகிறது. பாதாதிகேச |