பக்கம் எண் :

நாட விட்ட படலம் 571

 ''எல்லை தீர்வு அரிய வெங்
     கானம் யாதோ?'' எனச்
சொல்லினள்; அஃது எலாம்
      உணர, நீ சொல்லுவாய்.'

     மல்லர் மாநகர் -வளம் மிகுந்த அயோத்தி நகரத்தை;துறந்து
ஏகும்நாள் -
நீங்கி (காட்டுக்கு)ச் சென்ற காலத்தில்;மதி தொடும் -
சந்திரனைத் தீண்டுகின்ற;கல்லின் மாமதிள் -கற்களாலாகிய பெரிய
மதிலின்;மணிக்கடை கடந்திடுதல் முன் -அழகிய வாயிலைக் கடப்பதற்கு
முன்பே;எல்லை தீர்வு அரிய வெங்கானம் - எல்லையில்லாத கொடிய
கானம்; யாதோ என - எதுவோ என்று; சொல்லினாள் - கேட்டாள்;
அஃது எலாம் நீ உணரச் சொல்லுவாய் -அவையனைத்தையும்அவள்
மனம் கொள்ளுமாறு உரைப்பாய்.

     'ஆண்ட நகராரையொடு வாயிலகலாமுன் யாண்டையது கானென
இசைத்ததும் இசைப்பாய் (5258) என்ற பின்வரும் வரிகளை நினைக. புகார்
நகரத்து எல்லையிலேயே 'மதுரை மூதூர் யாது' (சிலப்.நாடுகாண்.41) என்று
கேட்ட கண்ணகி வினாவின் எதிரொலியே 'யாண்டையது கான்' என்ற
சீதையின் வினா.  சீதையின் கேள்வி, கணவன் மனையையன்றி
வேறொன்றையும் அறியாத அச்சீதையின் தன்மையையும், மெல்லியல்பையும்,
பேதைமையையும் வெளிப்படுத்தும்.                                72

மோதிரம் அளித்து விடைகொடுத்தல்

4519. இனைய ஆறு உரைசெயா,
     'இனிதின் ஏகுதி' எனா,
வனையம் மா மணி நல்
      மோதிரம் அளித்து, 'அறிஞ! நின்
வினை எலாம் முடிக!' எனா,
      விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான்
     அருளொடும், போயினான்.

     இனைய ஆறு உரைசெயா -(இராமன்) அனுமனிடம் இவ்விதமாக
அடையாளங்களைச் சொல்லி;இனிதின் ஏகுதி எனா -இனிதாகச் செல்வாய்
என்று கூறி;மா மணி வனையும் -சிறந்த இரத்தினங்கள் பதித்துச்
செய்யப்பட்ட;நல் மோதிரம் அளித்து -சிறந்த மோதிரத்தைக் கொடுத்து;
அறிஞ -
அறிவு மிக்கவனே!நின் வினை எலாம் - நீ மேற்கொண்ட செயல்
முழுவதும்;முடிக எனா -(இடை யூறில்லாமல்) இனிது முடிவதாகுக என்று;
விடை கொடுத்து உதவலும் -
விடைதந்து அனுப்பிய அளவில்;புனையும்
வார் கழலினான் -
கட்டப்பட்ட நீண்ட வீரக் கழலைப் பூண்டவனான
அனுமன்;அருளொடும் போயினான் -இராமனின் கருணையை முன்னிட்டுக்
கொண்டு சென்றான்.