பக்கம் எண் :

574கிட்கிந்தா காண்டம்

 ஆயினார், அவரும்; அங்கு
      அன்ன நாள் அவதியில்
தாயினார் உலகினை, தகை
      நெடுந் தானையார்.

     போயினார் -(அங்கதன் முதலிய வானர வீரர்கள் சுக்கிரீவனுடைய
கட்டளைப்படி தென் திசை நோக்கிச்) சென்றார்கள்;போயபின் -(அவர்கள்
அவ்வாறு) சென்ற பின்பு;இரவி காதலனும் -சூரியன் மகனான சுக்கிரீவனும்;
புற நெடுந் திசைகள் தோறும் -
(தென்திசைக்குப்) புறம்பான பெரிய பிற
திசைகளில் எல்லாம்;ஏயினான் -(விநதன் முதலிய பல வீரர்களை) விடை
கொடுத்தனுப்பினான்;ஏயின பொருட்கு -(சுக்கிரீவன்) ஏவின தொழிலாகிய
சீதையைத் தேடுவதற்கு;ஆயினார் அவரும் -இசைந்தவரான அந்த வானர
வீரரும்;உலகினைத் தகைநெடுந் தானையார்  - உலகத்தையே (தமது
வன்மையால்) எதிர்த்துத் தடுக்கவல்ல பெருஞ்சேனையை உடையவர்களாய்;
அன்ன நாள் அவதியில் -(தம் அரசனான சுக்கிரீவன் குறித்த) அந்த ஒரு
மாதத் தவணைக்குள் (தேடித் தருவதற்காக);தாயினார் -விரைந்து
சென்றார்கள்.

     மேற்கு, வடக்கு, கிழக்கு என்ற திசைகளில் இடபன், சதவலி, விநதன்
என்ற வீரர்களை அனுப்பினான் என்பது.  மூன்றாமடி : முற்றுமோனை.
ஆங்கு: அசை.

     உலகினைத் தகை நெடுந்தானையார்: உலகம் முழுவதும் எதிர்த்துவரினும்
தடுத்துப் போர் செய்யவல்ல பேராற்றல் வாய்ந்த வானரவீரர்என்பது.     1

4522.குன்று இசைத்தன எனக்
      குவவு தோள் வலியினார்,
மின் திசைத்திடும் இடைக்
      கொடியை நாடினர் விராய்,
வன் திசைப் படரும் ஆறு
      ஒழிய, வண் தமிழுடைத்
தென் திசைச் சென்றுளார்
      திறன் எடுத்து உரைசெய்வாம்.

     குன்று இசைத்தன என -மலைகளே பொருந்துமாறு வைக்கப்
பட்டுள்ளன வென்னும்படி;குவவுதோள் வலியினார் -அமைந்த திரண்ட
தோள்வலிமையுடைய வானரவீரர்கள்;மின் திசைத்திடும் -மின்னலும்
திகைக்கும் படியான;இடைக் கொடியை விராய் நாடினர் -இடையையுடைய
பூங்கொடிபோன்ற சீதையைத் தேடினவர்களாய்;வன்திசைப்படரும் ஆறு -
(கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று) திசைகளிலே செல்லுகின்ற வகை;
ஒழிய -
தவிர்த்து;வண்தமிழுடைத் தென்திசை -வளமான தமிழ்மொழி
வழங்கும் தெற்குத்திசை;சென்றுளார் -