பக்கம் எண் :

576கிட்கிந்தா காண்டம்

     சிந்துரப் பொடியாலும், மாணிக்கங்களாலும் சிவந்திருப்பது, நாகங்களும்
நீரருவிகளும் நிறைந்திருப்பது, மலையுச்சியில் சந்திரன் ஒளிர்வது என்ற இவை
விந்திய மலையிற் காண்பவை.

     இந்தியாறு : குற்றியலிகரம்.  (இந்து + யாறு)

ஒப்பு :  'பாணி பிறை கொன்ற பணிசூடி மானேந்தி
        வேணி யரனைப் பொருவும் வேங்கடம்'  (திருவேங்கட மாலை - 5)

சிந்துராகம் - சிந்தூர ராகம் என்னும் வடமொழி விகாரம்.  ராகம் - நிறம். 3

4524. அந் நெடுங் குன்றமொடு,
      அவிர் மணிச் சிகரமும்,
பொன் நெடுங் கொடிமுடிப்
      புரைகளும், புடைகளும்,
நல் நெடுந் தாழ்வரை நாடினார், -
      நவை இலார் -
பல் நெடுங் காலம் ஆம்
      என்ன, ஓர் பகலிடை.

     நவை இலார் -குற்றமற்ற அந்த வானர வீரர்கள்;அந்நெடுங்
குன்றமொடு -
உயர்ந்துள்ள அந்த விந்திய மலையினிடத்தில்;அவிர் மணிச்
சிகரமும் -
ஒளிவீசும் இரத்தினங்களையுடைய சிகரங்களையும்;பொன்
நெடுங்கொடு முடிப் புரைகளும் -
அழகான நீண்ட அந்தச் சிகரங்களிலுள்ள
குகைகளையும்;புடைகளும் -பக்கங்களையும்;நல் நெடுந் தாழ்வரை -
அழகிய நீண்ட அடிவாரங்களையும்;ஓர் பகலிடை -ஓரு
பகற்பொழுதுக்குள்ளாக;பல் நெடுங் காலம் ஆம் என்ன -மிகுதியான பல
நாள்கள் தேடிக் காண்பது போன்று;நாடினார் -தேடினார்கள்.

     வானரர்கள் மிகப் பலராயிருந்ததாலும், செய் தொழிலை மிக்க
ஊக்கத்தோடு செய்ததாலும் பலகாலம் செய்யக்கூடிய பணிகளை ஒரு
பகற்பொழுதிலேயே செய்துமுடித்தனர் என்பது.

     குன்றமொடு : வேற்றுமை மயக்கம்.

     புரை : துளை - இங்கே குகையைக் குறித்தது.                    4

4525. மல்லல் மா ஞாலம் ஓர்
      மறு உறாவகையின், அச்
சில் அல் ஓதியை
      இருந்த உறைவிடம் தேடுவார்,
புல்லினார் உலகினை, பொது
      இலா வகையினால்,
எல்லை மா கடல்களே
      ஆகுமாறு, எய்தினார்.