பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 579

ஆடு இடங்களும் -வந்து சஞ்சரிக்கும் இடங்களையும்;சுரும்பு மூசு தேன்
-
சுரும்புகளும், நறுமண மலர்களில் மொய்க்கும் தேன் என்ற வண்டுகளும்;
பன்னி ஆடு இடங்களும் -
பாடித் திரிகின்ற இடங்களையும்;பரந்து
சுற்றினார் -
துழாவித் தேடித் திரிந்தார்கள்.

     நருமதையாற்றின் பெருஞ்சிறப்பாலும், அதனைச் சார்ந்த இடங்களின்
மிக்க இனிமையாலும் அங்கே தேவமாதர்களும், தேவர்களும் வரலாயினர்
என்பது.  சுரும்பு, தேன்: வண்டின் வகைகள்.  சுரும்பு எனும் வண்டுகள்
எல்லாப்பூமணத்திலும் செல்லும் தன்மையன என்றும், தேன் என்னும்
வண்டுகள் நறுமண மலரிடத்தே மட்டும் செல்லும் தன்மையன என்றும்
கூறுவர்.                                                      8

4529.பெறல் அருந் தெரிவையை நாடும் பெற்றியார்,
அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ்
நிறை நறுந் தாமரை முகமும், நித்தில
முறுவலும், காண்பரால், முழுதும் காண்கிலார்.

     பெறல் அருந் தெரிவையை -பெறுதற்கு அரிய சீதையை;நாடும்
பெற்றியார் -
தேடும் தன்மையுடையவர்களான வானரர்கள்;அறல் நறுங்
கூந்தலும் -
கருமணலாகிய நறுமணமுள்ள அவளது கூந்தலையும்;அளக
வண்டுசூழ் நிறை -
கூந்தல் போலக் கருநிறமுள்ள வண்டுகள் சூழ்ந்து
நிறைந்துள்ள;நறுந்தாமரை முகமும் -தாமரை மலராகிய அவளது
முகத்தையும்;நித்தில முறுவலும் -(அலைகளால் கொழிக்கப்படுகின்ற)
முத்துக்களாகிய அவளுடைய பற்களையும்;காண்பர் -காண்பார்கள்;
முழுதும் காண்கிலார் -
(ஆனால்) சீதையின் உருவ முழுவதையும் ஒருசேரக்
காணாதவரானார்கள்.  ஆல் - அசை.

     சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்கள் நருமதையாற்றின்கரையில்
அச் சீதையின் உருவ முழுவதையும் பார்க்கமுடியாமல் அவளது முகத்திற்கும்
அந்த முகத்திலுள்ள உறுப்புகளுக்கும் ஒப்பான சில பொருள்களை மட்டுமே
கண்டனர்; தாம் தேடிவந்த சீதையின் முழுஉருவத்தையும் நிகர்த்தனவற்றைக்
காணவில்லை. போலிகளிலும் முழுமையானவற்றை - சீதைக்கு முழுமையாக
ஒப்பு கூறத்தக்கனவற்றை வானரர் காணவில்லை.

     நருமதையாற்றில் கருமணல் சீதையின் கூந்தலையும், தாமரை மலர்கள்
முகத்தையும், அதன் கரையில் கிடக்கும் முத்துக்கள் பற்களையும் ஒக்கும்
என்பது.  அளக வண்டுசூழ் தாமரைமுகம் - உவமையை அங்கமாகக் கொண்ட
உருவகம்.  அறற் கூந்தல், நித்தில முறுவல் - உருவகம்.  காண்பரால் முழுதும்
காண்கிலார்: முரண்தொடை.                                      9

4530.செரு மத யாக்கையர், திருக்கு இல் சிந்தையர்,
தரும தயா இவை தழுவும் தன்மையர்,
பொரு மத யானையும் பிடியும் புக்கு, உழல்
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார்.

     செரு மத யாக்கையர் -போர் புரிவதில் எக்களிப்புக் கொண்ட
உடம்பினையுடையவர்களும்;திருக்கு இல் சிந்தையர் -மாறுபாடற்ற