மனமுடையவர்களும்;தருமம்தயா இவை தழுவும் தன்மையர் -தரும மும் அருளும் இயல்பாக அமைந்த தன்மையுடையவர்களுமாகிய வானரர்கள்; பொரு மத யானையும் -போர் செய்கின்ற மதங் கொண்ட ஆண்யானைகளும்;பிடியும் -பெண் யானைகளும்;புக்கு உழல் -புகுந்து விளையாடுகின்ற;நருமதை ஆம் எனும் நதியை -நருமதை என்னும் பேர் கொண்ட ஆற்றை;நீங்கினார் -கடந்து சென்றார்கள். யாக்கை : உதிரம் முதலான எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது என்று உடலுக்குக் காரணக்குறி. திருக்கு இல்சிந்தையர்: (குரங்குத் தன்மையால்) மாறாமல் ஒருபடித்தாய மனமுடையவர். ஆம் :அசை. 10 ஏழுகூட மலையை வானரர் அடைதல் 4531. | தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம் ஆம், நாம கூடு அப் பெருந் திசையை நல்கிய, வாம கூடச் சுடர் மணி வயங்குறும், - ஏமகூடத் தடங் கிரியை எய்தினார். |
தாமகூடத் திரைதீர்த்த சங்கம் ஆம் -ஒளியமைந்த சிகரங்களிலி ருந்து தோன்றுகின்ற அலைகளையுடைய ஆறுகளின் சங்கமம் ஆகிய;நாம கூடு அப்பெருந் திசையை நல்கிய -புகழுடன் கூடியதும் பெரியதும் ஆகிய அத்திசையைப் பாதுகாப்பதாகிய;வாம கூடச் சுடர் மணி வயங்குறும் - அழகிய தொகுதியாகிய ஒளியையுடைய இரத்தினங்கள் விளங்குகின்ற;ஏம கூடத் தடங்கிரியை -ஏமகூடமென்னும் பெரிய மலையை;எய்தினார் - போய் சேர்ந்தார்கள். பல புண்ணிய ஆறுகளின் சங்கமமும் மிகச் சிறந்த இரத்தினங்களும் நிரம்பப் பெற்றது ஏமகூடமலை என்பது. ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. மேருவின் தெற்கு இமயத்துக்கப்பால் 9000 யோசனையில் உள்ளது என்ற அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாமம் - ஒளி; நாமம் - புகழ்; வாமம் - அழகு; ஏமம் - பொன். திரிபு என்னும் சொல்லணி இப்பாடலில் வந்துள்ளது. முதலடியில் 'கூடம்' சிகரத்தையும், மூன்றாமடியில் தொகுதியையும் குறித்தது. 11 4532. | மாடு உறு கிரிகளும், மரனும், மற்றவும், சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப் பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது; வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது; |
மாடு உறு கிரிகளும் -(அந்த ஏமகூட மலை) பக்கத்திலுள்ள மலைகளும்;மரனும் -மரங்களும்;மற்றவும் -பிற பொருள்களும்; |