பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 581

சூடு உறு பொன் என -சுடச்சுடரும் பொன்போல;பொலிந்து தோன்றுற-
விளங்கித் தோன்றும்படி;பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது -பெருமை
மிக்க ஒளியைப் பரவச் செய்கின்றது;வீடு உறும் உலகினும் -
சுவர்க்கலோகத்தைக் காட்டிலும்;விளங்கும் மெய்யது -மிகுதியாக ஒளி
விளங்கும் தோற்றத்தையுடையது.

     பொன் போன்ற நிறமுள்ள அந்த ஏம கூடத்தின் ஒளியால் அதன்
பக்கமுள்ள பொருள்களெல்லாம் பொன்னிறமாகக் காணப்பட்டன என்பது
அஃதாவது மலைகளும் மரமும் பிறவும் தமது இயற்கை நிறம் மாறி
அருகிலுள்ள ஏமகூடத்தின் நிறத்தையடைந்தன, என்றார். இது பிறிதின் குணம்
பெறலணி.  பாடு: பெருமை. பொன்னுலகென்று அழைக்கப் பெறும்
சுவர்க்கலோகத்திலுள்ள பொருள்கள் யாவும் பொன்மயமாக விளங்குமென்பது
புராண நூற்கொள்கை.                                           12

4533. பறவையும், பல் வகை
      விலங்கும், பாடு அமைந்து
உறைவன, கனக நுண்
     தூறி ஒற்றலான்,
நிறை நெடு மேருவைச்
      சேர்ந்த நீர ஆய்,
பொறை நெடும் பொன்
      ஒளி மிளிரும் பொற்பது.

     பாடு அமைந்து உறைவன -(அம் மலையானது) தன்னிடம் வந்து
வாழுகின்ற;பறவையும் -பறவைகளும்;பல்வகை விலங்கும் -பல
வகையான மிருகங்களும்;கனக நுண் தூளி ஒற்றலால் -(அம் மலை
யிலுள்ள) நுட்பமான பொன் துகள்கள் ஒட்டிக் கொள்வதால்;நிறை நெடு
மேருவை -
நிறைந்து ஓங்கியுள்ள பெரிய மேரு மலையை;சேர்ந்த நீர்
ஆய்-
சேர்ந்த தன்மையுடையன என்று சொல்லுமாறு;பொறை
நெடும்பொன் ஒளி-
வலிமை மிக்க பொன்னின் ஒளியை;மிளிரும்
பொற்பது -
(எல்லாப்பொருள்களின் மேலும்) பெய்கின்ற பொலிவுடையது.

     தன்னிடம் வாழும் பறவைகளும் விலங்குகளும் மேருவைச் சார்ந்த
பொருள்கள்போலப் பொன்துளை படியப்பெற்று விளங்குமாறு அப் பொருள்கள்
எல்லாவற்றையும் பொன்மயமாகச் செய்வது ஏமகூடமலை என்பது. 'பனிமால்
இமயப் பொருப்பகம் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறமாய்
இருக்கும்' என்ற காரிகைத் தொடர் ஒப்பு நோக்கத் தக்கது. (யாப். காரிகை. 3)
கனகம் : பொன்.                                                13

4534. பரவிய கனக நுண் பராகம் பாடு உற
எரி சுடர்ச் செம் மணி ஈட்டத்தோடு இழி
அருவிஅம் திரள்களும் அலங்கு தீயிடை
உருகு பொன் பாய்வ போன்று, ஒழுகுகின்றது: