பரவிய கனக நுண் பராகம் -பரவியுள்ள பொன்னின் சிறுதுகள்கள்; பாடு உற - தம்மிடத்தில் பொருந்த;எரிசுடர்ச் செம்மணி -விளங்குகின்ற ஒளியையுடைய சிவந்த பதுமராக இரத்தினங்களின்;ஈட்டத்தோடு இழி அம்திரள் -தொகுதியோடு கீழே இறங்குகின்ற;அருவிகளும் - அருவிகளாகிய அழகிய கூட்டங்களும்;அலங்கு தீயிடை -எரிகின்ற நெருப்பிலே;உருகு பொன் -உருகிய பொன்னானது;பாய்வ போன்று - பாய்ந்தோடுவது போல;ஒழுகுகின்றது -ஒழுகப்பெறும் தன்மையது. பொற்கொடிகள் பொருந்திச் செம்மணியின் நிறமமைந்த பெருகுகின்ற நீர்ப் பெருக்கிற்கு, நெருப்பிலுருக்கி ஓடவிட்ட பொன்னை உவமையாகக் குறித்தார். கனக பராகம்: பொன்துகள்; செம்மணி: மாணிக்கம். செம்மணிகளில் பொன்மயமான அருவிகள் பாய்வது, தீயினிடையில் பொன் உருகுவதுபோலுமென வருணித்தவாறு. 14 4535. | விஞ்சையர் பாடலும், விசும்பின் வெள் வளைப் பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும், குஞ்சர முழக்கமும், குமுறு பேரியின் மஞ்சு இனம் உரற்றலும், மயங்கும் மாண்பது; |
விஞ்சையர் பாடலும் -(அங்கு வந்துள்ள) வித்தியாதரர்களின் பாட்டொளியும்;விசும்பின் வெள்வளைப் பஞ்சின் மெல் அடியினார் - தேவலோகத்திலிருந்து வந்தவரான வெண்மையான வளையல்களை யணிந்த பஞ்சுபோன்ற மெல்லிய அடிகளையுடைய தேவமாதர்களின்;ஆடல் பாணியும்-ஆடலோடு இசைந்த தாளங்களின் ஒலியும்;குஞ்சர முழக்கமும் -யானைகளின் பிளிற்றோசையம்;குமுறு பேரியின் - முழங்குகின்ற முரசுபோன்ற;மஞ்சு இனம் உரற்றலும் -(அங்கு வந்து தங்கும்) மேகக்கூட்டங்களின் இடியோசையும்;மயங்கும் -கலந்துள்ள; மாண்பது -பெருமையுடையது. ஆடல்பாணி: நாட்டியத்துக்கேற்ற தாளம். பாணி: கையினால் ஒத்தறுத்துத் தாளம்போடுவது. 15 அதனை இராவணன் மலையென ஐயுறுதல் 4536. | அனையது நோக்கினார், அமிர்த மா மயில் |
|