பக்கம் எண் :

ஆறு செல் படலம் 619

14.  ஆறு செல் படலம்

     வானர வீரர்கள் பிலத்திலிருந்து வெளிவந்த பின்பு, சுக்கிரீவன்
குறிப்பிட்ட வழியை சீதையைத் தேடிச் சென்றதைக் கூறும் படலம்.  (ஆறு -
வழி) பொய்கைக் கரையில் வானரர் உறங்கத் துமிரன் வருகிறான்; அவ்
அசுரன் அங்கதனை மார்பிலறைகிறான்; அங்கதனும் திருப்பியறைய, அந்த
அசுரன் அலறி வீழ்கிறான்.  அந்த அசுரனைக் குறித்து அனுமன்
வினாவுகிறான்; அதற்கு அங்கதன் விடை கூறுகிறான்.  பின், சாம்பவான்
துமிரனது வரலாறு கூறுகிறான்.  பின்னர், வானரர் சீதையைத் தேடிப்
பெண்ணையாற்றை அடைகிறார்கள்; அதன்பிறகு அவர்கள் தசநவ நாடு
அடைகிறார்கள்; விதர்ப்ப நாட்டில் தேடுகிறார்கள்; தண்டக வனத்தில் துருவி,
முண்டகத் துறையை அடைகிறார்கள்; பாண்டு மலையின் சிகரத்தை அடைந்து,
அங்கிருந்து கோதாவரியைச் சென்றடைகிறார்கள்; பின்னர்ச் சுவணகத்
துறையில் அவர்கள் புகுந்து குலிந்த தேசத்தைக் கடக்கின்றார்கள்; கடந்து
அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலையைச்
சேர்கின்றார்கள்; அங்கிருந்து தொண்டை நாட்டை அடைகின்றார்கள்; பிறகு
சோழநாட்டை அடைந்து மலைநாட்டின் வழியாகப் பாண்டிநாடு
அடைகின்றார்கள்; முடிவாக, மயேந்திர மலையைச் சென்று அடைகின்றார்கள்.

பொய்கைக் கரையில் வானரர் உறங்கும்போது துமிரன் வருதல்

கலித்துறை

4594. கண்டார், பொய்கைக் கண் அகல் நல்
      நீரைக் கரை தாம் உற்று,
உண்டார், தேனும் ஒண் கனி
      காயும்; ஒரு சூழல்,
கொண்டார் அன்றோ, இன்துயில்;
      கொண்ட குறி உன்னி,
தண்டா வென்றித் தானவன்
      வந்தான், தகவு இல்லான்.

     கண்டார் -(அப் பொய்கையைக்) கண்ட வானரவீரர்கள்;பொய் கைக்
கண் -
அந்தப் பொய்கையிலுள்ள;அகல்நீர்க் கரைதாம் உற்று -
நீர்வளமுள்ள அகன்ற கரையையடைந்து;தேனும் ஒண்கனி காயும் உண்டார்
-
தேனையும் நல்ல பழங்களையும் காய்களையும் தின்றார்கள்;ஒரு சூழல் -
அப் பொய்கையின் ஒரு பக்கத்தில்;இன்துயில் கொண்டார் -இனிய
உறக்கத்தை மேற்கொண்டார்கள்;கொண்ட குறி