பக்கம் எண் :

620கிட்கிந்தா காண்டம்

உன்னி - (அவ்வாறு வானரர்கள் வந்து) படுத்துறங்குவதை அறிந்து;தண்டா
வென்றி -
குறையாத வெற்றியையுடைய;தகவு இல்லான் -நற்குணமில்லாத
ஓர் அசுரன்;வந்தான் -(அவ் இடத்திற்கு) வரலானான்.

     அன்று, ஓ : அசைகள். வானரவீரர்கள் தாங்கள் வந்து சேர்ந்த
பொய்கைக் கரையிலே காய்  கனி முதலியவற்றைத் தின்று ஆழ்ந்து உறக்கங்
கொள்ள, அப்போது ஓர் அசுரன் அதனை அறிந்து அங்கு வந்தான் என்பது.
தாக்குதற்கு ஏற்ற நேரம் எனக் கருதினான், அவ் அரக்கன். தானவர்:
அரக்கரின் வேறான அசுரர்.  இங்குக் கூறப்பெற்ற அசுரன் துமிரன் என்பவன்.
                                                            1

4595. மலையே போல்வான்; மால் கடல்
     ஒப்பான்; மறம் முற்ற,
கொலையே செய்வான்; கூற்றை
      நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான்; நீர்மை
      இலாதான்; நிமிர் திங்கட்
கலையே போலும் கால
     எயிற்றான்; கனல் கண்ணான்;

     (அந்த அசுரன்) மலையே போல்வான் -(தோற்றத்தில்) மலையைப்
போன்றவன்;மால் கடல் ஒப்பான் -(உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்)
பெரிய கரிய கடலைப் போன்றவன்;மறம் முற்ற, கொலையே செய்வான் -
கொடுமையில் முதிர்ச்சியடைந்து யாவரையும் கொன்று தீர்ப்பவன்;கூற்றை
நிகர்ப்பான் -
இயமயையேஒத்திருப்பவன்;கொடுமைக்கு -
கொடுமையென்னும் குணத்திற்கு;ஓர் நிலையே போல்வான் -ஓர்
இருப்பிடமாவான்;நீர்மை இலாதான் -நற்பண்பு சிறிதும் இல்லாதவன்;நிமிர்
-
(வானில்) எழுந்து விளங்கும்;திங்கட் கலையே போலும் -சந்திரனின்
பிறை போல் விளங்கும்;கால எயிற்றான் -நச்சுப்போன்ற
பற்களையுடையவன்;கனல் கண்ணான் -(நெருப்புப் போன்று) கனல் கக்கும்
கண்களையுடைவன்.

     அந்த அசுரனின் உருவத்தின் வலிமை உயர்வு முதலியவற்றிற்கு
மலையும், நிறம், பெருமை விரிவு முதலியவற்றிற்குக் கடலும் உவமைகளாயின.
மால்: கருமை, பெருமைகளை உணர்த்தியது.  காலம்: கரியநஞ்சு.          2

கலிவிருத்தம்

4596.கருவி மா மழைகள் கைகள் தாவி மீது
உருவி, மேனி சென்று உலவி ஒற்றலால்,
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்,
அருவி பாய்தரும் குன்றமே அனான்;