பக்கம் எண் :

ஆறு செல் படலம் 621

     (அந்த அசுரன்)கருவி மாமழை -(உலகம் நடைபெறுவதற்கு)
முதற்காரணமான பெரிய மேகங்கள்;கைகள் தாவி -அவன் கைகளில் தாவி;
மீது உருவி மேனி சென்று -
ஊடுருவி அவனது உடலில் சென்று;உலவி -
உலாவி;ஒற்றலால் -படிதலாலும்;பொருவு இல்மாரி -ஒப்பில்லாத மழைநீர்;
மேல் ஒழுகு பொற்பினால் -
அவன் மேல் பெருகி வழிந்த அழகாலும்;
அருவி பாய்தரும் -
நீரருவிகள் பாய்ந்தோடி வரும்;குன்றமே அனான் -
ஒரு மலையையொத்தவனானான்.

     கருவி: காரணம்.  மின்னல் இடி முதலியவற்றோடு கூடி வருவதால் கருவி
மழை என்பதைத் தொகுதியான பெரிய மேகம் எனவும் கொள்ளலாம்.  பழைய
நூல்களில் இவ்வழக்கு உண்டு.  (குறுந். 42, மணி. 17-92) அந்த அசுரனின்
தோள்கள்மேலும் உடம்பின் மேலும் மேகங்கள் தவழ்ந்து பெருகுமாறு
மழைநீரைப் பொழிவதால், மேகங்கள் தன்மேல் உலாவப் பெற்று நீரருவி
பாயும் மலை அவனுக்கேற்ற உவமையாகும். சிலேடையணி.            3

4597.வானவர்க்கும், மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்;
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட, வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ?

     வானவர்க்கும் -(அந்த அசுரன்) தேவர்களுக்கும்;அவர் வலிக்கு
நேர் தானவர்க்கும் -
அத் தேவரின் வலிமைக்கு ஒப்பான அசுரர்களுக் கும்;
அரிய -
வெல்லமுடியாத;தன்மையான்-வலிமையுடையவன்;ஆனவர்க்கு
அலால் -
(ஆகவே) அத்தகைய தேவர், அசுரர்களுக்கே யல்லாமல்;
அவனோடு ஆட -
அந்தக் கொடிய அசுரனை எதிர்த்துப் போரிட;வேறு
ஏனவர்க்கும் -
மற்றுமுள்ள எவராயினும்;ஒன்று எண்ண ஒண்ணுமோ -
சிறிதேனும் நினைக்க முடியுமோ? (நினைக்க முடியாது).

     மற்று: அசை. அந்த அசுரனோடு போர் செய்தல் தேவர்களுக்கும்,
அசுரர்களுக்குமே முடியாதென்றால் மற்ற யாரால் முடியும்? ஒருவராலும்
இவனோடு போர் செய்து வெல்லுவதை நினைக்கவும் முடியாது என்பது.
ஏனவர்:பிறர்.                                               4

4598.பிறங்கு பங்கியான்;
      பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான்,
      பிசையும் கையினான்;
அறம் கொள் சிந்தையார்,
      நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து,
      ஒல்லை எய்தினான்.