பிறங்கு பங்கியான் -விளங்கும் செம்பட்டை மயிரையுடையவன்; பெயரும் பெடபினில் -(தான் நடந்து) செல்லும் தன்மையில்;கறங்கு போன்று உளான் -காற்றாடியை யொத்துள்ளவனாய்;பிசையும் கையினான்- (கோபத்தால்) பிசையும் கைகளையுடையவன்;அறம் கொள் சிந்தையார் - தரும சிந்தனையுள்வர்களும்;நெறி செல் ஆய்வினால் -வழி நடந்துவந்த களைப்பினால்;உறங்குவாரை -தூங்குகின்றவர்களுமாகிய அந்த வானர வீரர்களை;ஒல்லை வந்து எய்தினான் -விரைவில் வந்து சேர்ந்தான். இராமபிரானின் தொண்டில் கருத்தாய்ச் செல்லுவதால் வானரரை 'அறங்கொள் சிந்தையார்' என உயர்த்திக் கூறினார். ஆய்வு: நுணுகுதல் (இளைத்தல்). கை பிசைதல்: கொடுமைக்குறி. பங்கி: ஆண்பால் தலைமயிர். 5 அங்கதன் மார்பில் அசுரன் கையால் அறைதல் 4599. | 'பொய்கை என்னது என்று உணர்ந்தும், புல்லியோர் எய்தினார்கள் யார்? இது எனா?' எனா ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில், கையின் மோதினான்; - காலனே அனான். |
காலனே அனான் -யமனைப் போன்றவனாகிய துமிரன் என்ற அந்த அசுரன்;பொய்கை என்னது என்று உணர்ந்தும் -இந்தத் தடாகம் எனக்கு உரியது என்று அறிந்தும்;எய்தினார்கள் -இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய; புல்லியோர் -அற்பர்கள்;யார் -யாவர்;ஆ இது என் -ஆ இது என்ன வியப்பு!எனா -என்று சொல்லிக் கொண்டு;ஐயன் அங்கதன் - தலைவனான அங்கதனுடைய;அலங்கல் மார்பினில் -மாலையணிந்த மார்பிலே;கையின் மோதினான் -(தன்) கையினால் அறைந்து தாக்கினான். 'இப் பொய்கை எனது என்று யாவருக்கும் தெரிந்திருந்தும் இங்கு வந்து சேர்ந்தவர்கள் அறிவில்லாதவர்களே; இப்படியும் அறிவில்லாதவர்கள் இருக்கின்றார்களே' என்று மிக்க செருக்கினால் கூறிக் கொண்டே ஆழ்ந்து உறங்கும் அங்கதனது மார்பில் ஓங்கியறைந்தனன் துமிரன் என்பது. ஆ - வியப்பிடைச் சொல். இது எனா என்பதிலுள்ள ஆகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 6 அங்கதன் பதிலுக்கு அறைய, துமிரன் அலறி வீழ்தல் 4600. | மற்று அம் மைந்தனும் உறக்கம் மாறினான்; 'இற்று இவன் கொலாம் இலங்கை வேந்து' எனா, |
|