பக்கம் எண் :

ஆறு செல் படலம் 623

 எற்றினானை, நேர்
      எற்றினான்;  அவன்
முற்றினான், இகற்கு
      ஆதி மூர்த்தியான்.

     மற்று -பிறகு;அம் மைந்தனும் -வலியவனான அந்த அங்கதனும்;
உறக்கம் மாறினான் -
தூக்கம் கலைந்தான்;இற்று இவன் -இத்தன்மையான
இவனே;இலங்கை வேந்து கொல் ஆம் எனா -இலங்கைக்க அரசனான
இராவணன் போலும் என்று கருதி;எற்றி னானை -(தன்னைத்)
தாக்கியவனான அந்த அசுரனை;நேர் ஏற்றினான் -எதிர்த்து அறைந்தான்;
இகற்கு ஆதி மூர்த்தியான் அவன் -
போர்த் திறத்திற்குரிய கடவுள் போன்ற
அவன்;முற்றினான் -உயிர் முடிவுற்று இறந்தான்.

     துமிரன் என்ற அவ் அசுரனால் அறையப்பட்ட அங்கதன்,
தூக்கத்திலிருந்து எழுந்து அவனை இராவணனென்று கருதி, அவனது
மார்பிலறைய, அந்த அசுரன் கீழே விழுந்து இறந்தான் என்பது. போர்த்திறம்
என்னும் பண்பிற்கே மூல வடிவம் போன்றவனெனத் துமிரனைக் கவிஞர்
உயர்த்திக் கூறுகிறார்.  முற்றுதல் - ஆயுள் முடிந்துஇறத்தல்.            7

4601. இடியுண்டு ஆங்கண் ஓர்
      ஓங்கல் இற்றது ஒத்து,
அடியுண்டான் தளர்ந்து
     அலறி வீழ்தலும்,
தொடியின் தோள் விசைத்து
      எழுந்து சுற்றினார்,
பிடியுண்டார் எனத்
      துயிலும் பெற்றியார்.

     ஆங்கண் -அப்பொழுது;ஓர் ஓங்கல் -ஒரு மலை;இடி உண்டு
இற்றது ஒத்து -
இடியினால் தாக்கப்பட்டுத் தகர்ந்து விழுந்ததுபோல;அடி
உண்டான் -
அங்கதனால் அடியுண்ட அந்த அசுரன்;தளர்ந்து -சோர்வுற்று;
அலறி வீழ்தலும் -
வாய்விட்டு அலறிக் கொண்டு கீழே விழுந்ததும்;
பிடியுண்டார் என -
பேயினால் பிடிக்கப்பட்டார் போல;துயிலும் பெற்றியார்
-
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வானர வீரர்கள்;தொடியின் தோள் விரைந்து -
வளையணிந்த தோள்களை வேகமாக வீசிக்கொண்டு;எழுந்து -எழுந்து
வந்து;சுற்றினார் -(அந்த அசுரனைச்) சூழ்ந்து கொண்டார்கள்.

     இடி விழுந்த மலை சரிந்து அழிவதுபோல அங்கதனால் அறையுண்ட
அசுரன் தரையில் சாய்ந்து உயிரொடுங்க வானரர்கள் அப்பொழுது எழுந்த
ஆரவாரத்தினால் உறக்கம் நீங்கி எழுந்து கீழே விழுந்த அந்த அசுரனைச்
சூழ்ந்து கொண்டனர் என்பது.  தொடியின் தோள்கள்: வளையணிந்த
தோள்கள்; வீரர்கள் தம் தோள்களில் வீர வளையணிதல் மரபு.  நயம்: முன்பு
அந்த அசுரனை 'மலையே