பக்கம் எண் :

626கிட்கிந்தா காண்டம்

முலைகளையும்;தடத்து ஏய் ஆம்பல் -நீர் நிலையில் பொருந் திய
செவ்வாம்பல் மலராகிய;உண்ண இன் அமிழ்து ஊறுவாய் -பருகுமிடத்து
இனிய அமிழ்தம் சுரக்கின்ற வாயையும்;தரளம் -முத்துக் களாகிய;வண்ண
வெண் நகை -
அழகான ஒளிமிக்க பற்களையும்;வாள்முகம் -ஒளி
பொருந்திய (தாமரை மலர்களாகிய) முகத்தையு முடைய;பெண்ணை -
பெண்ணை நதியாகிய ஒரு பெண்ணை;நண்ணினார் -சென்று சேர்ந்தார்கள்.

     பெண்ணை நதியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார்.  பெண்ணை :
நதி, பெண்; இச் சொல் நதியைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமைத்
தொகையாகவும் (பெண்ணை - பெண்ணையை), மற்றொரு பொருளான
பெண்ணைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமை விரியாகவும் (பெண் - ஐ)
கொள்ள வேண்டும்.  பெண்ணை நதி: மணற்குன்றுகள், செவ்வாம்பல்,
முத்துக்கள், தாமரை. பெண்: முலைகள், வாய், பற்கள், முகம்.
சிலேடையணியை அங்கமாகக் கொண்டுவந்த இயைபுருவகவணி.
உவமையாவதற்குரிய சக்கரவாகப் பறவையை உவமேயமாகிய முலைகளிலும்
தாழ்த்தி்க் கூறியது எதிர்நிலையணி.  முலைகளுக்குப் புளினம் உயர்ச்சியில்
உவமையாம். நயம்: பெண்ணை நாடுவோர் பெண்ணை நண்ணினார்.  இதில்
பெண்ணை என்ற சொல் இரட்டுற மொழிதலாக ஒரு பெண்ணுக்கும்
பெண்ணையென்னும் நதிக்கும் அமைத்த நயம்காணத்தக்கது.            12

4606.துறையும், தோகை நின்று ஆடு சூழலும்,
குறையும், சோலையும், குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும், தெள்ளு பூந் தடமும், தெண் பளிக்கு
அறையும், தேடினார் - அறிவின் நீடினார்.

     அறிவின் நீடினார் -அறிவின் எல்லைகளைக் கண்டவர்களான அவ்
வானர வீரர்;துறையும் -(அந்த நதியின்) இறங்கு துறைகளிலும்;தோகை
நின்று ஆடு சூழலும் -
மயில்கள் (களிப்போடு) நின்று கூத்தாடு கின்ற
இடங்களிலும்;குறையும் -அந்த ஆற்றின் இடையே இருந்த திட்டுக்களிலும்;
சோலையும் -
அநத ஆற்றையடுத்த பூஞ்சோலைகளிலும்;குளிர்ந்த சாரல்
நீர்ச் சிறையும் -
குளிர்ந்த காற்று வீசும் பக்கங்களிலமைந்த நீர்நிலைகளான
ஏரி குளங்களிலும்;தெள்ளு பூந் தடமும் -தெளிவான மலர்கள் நிறைந்த
தடாகங்களிலும்;தெண் பளிக்கு அறையும் -ஒளியுடன் விளங்கிய பளிங்குப்
பாறைகளிலும்;தேடினார் -சீதையைத் தேடினார்கள்.

     தோகை: சினையாகுபெயராய் மயிலைக் குறித்தது.  குறை: ஆற்றிடைத்
திட்டு (தீவு).                                                    13

4607. அணி கொழித்து வந்து, எவரும் ஆடுவார்
பிணி கொழித்து, வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து, அருஞ் சுழிகள்தோறும், நல்
மணி கொழிப்பதன் துறையின் வைகினார்.