பக்கம் எண் :

640கிட்கிந்தா காண்டம்

போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது;அலங்கு தாள்
இணை -
விளங்குகின்ற இரண்டு திருவடிகளையும்;தாங்கிய -தாங்கி நின்ற;
அம்மலை -
அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற;விலங்கும் -
மிருகங்களும்;வீடு உறுகின்றன -மோட்சத்தையடைகின் றன
(அவ்வாறானால்);மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு -உண்மை
நெறியான தவ நியமங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர்
முதலோர்க்கு;அனையது - அந்த மோட்சமானது;பொய்க்குமோ-
கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது).

     மிகப் பெருஞ்சிறப்பு வாய்ந்த அத் திருவேங்கட மலையில் வாழும்
மிருகங்களும் வீட்டுலகத்தையடையுமென்றால் தவவொழுக்கங்களில் நடக்கின்ற
யோகியர் முதலோர்க்கு அந்த வீட்டுலகம் கிடைப்பது தவறுமோ என்பது.
விலங்கும்: உம்மை இழிவுசிறப்பு. திருவேங்கடமலை வீட்டுப் பதவியைத்
தவறாது அளிக்கவல்லதாகையால்தான் 'எம்பெருமான் பொன்மலையில்
ஏதேனும் ஆவேனே' (பெருமாள் திருமொழி 4 : 10) என்றார் குலசேகராழ்வார்.
                                                             36

4630.ஆய குன்றினை எய்தி, அருந்தவம்
மேய செல்வரை மேயினர், மெய்ந் நெறி
நாயகன்தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார்.

     ஆய குன்றினை -(வானரவீரர்) அத்தகைய தூய்மையும் சிறப்பும்
அமைந்த திருவேங்கடமலையை;எய்தி -அடைந்து;அருந்தவம் மேய
செல்வரை -
அரிய தவத்தைப்பொருந்திய தவயோகிகளை;மேவினர் -
அடைந்து;மெய்ந்நெறி நாயகன்தனை -என்றும் அழியாத
மோட்சநிலைக்குத் தலைவனான திருவேங்கடநாதனை;நாளும் வணங்கிய -
தினமும் வணங்கி வழிபாடு செய்த;தூய நல்தவர் -தூய்மையான சிறந்த
தவத்தையுடைய அப் பெரியவர்களின்;பாதங்கள் சூடினார் -திருவடிகளைத்
தம் தலைமேல் சூடி வணங்கினார்கள்.

     திருவேங்கட நாதனை வணங்குகின்ற பெரும்பேறு பெற்றுள்ளவராதலால்
அவர்களை 'அருந்தவமேய செல்வர்', 'தூய நல் தவர்' என்றுகூறினார்.   37

தொண்டை நாட்டை அடைதல்

4631. சூடி, ஆண்டு அச்
      சுரி சூழல் தோகையைத்
தேடி, வார் புனல் தெண்
      திரைத் தொண்டை நல்
நாடு நண்ணுகின்றார்,
     மறை நாவலர்
வேடம் மேயினர், வேண்டு
      உரு மேவுவார்.