பக்கம் எண் :

ஆறு செல் படலம் 641

     வேண்டு உரு மேவுவார் -விரும்பிய வடிவங்களை எடுக்கும் திற
மையுடைய வானரர்கள்;சூடி -(தவயோகிகளின் திருவடிகளைத் தம்)
தலையில் சூடிய பின்பு;ஆண்டு -அத் திருவேங்கட மலையில்;அச்
சுரிகுழல் தோகையை -
சுருண்ட கூந்தலையுடைய மயில் போன்ற சீதையை;
தேடி -
அங்கே தேடிப் பார்த்து(க் காணாமல்);மறைநாவலர் வேடம்
மேயினர் -
வேதங்களில் வல்ல அந்தணர்களின் வேடத்தைப்
பூண்டவர்களாய்;தெண் திரை -தெளிந்த அலைகளையுடைய;வார் புனல் -
மிக்க நீர் நிறைந்த;தொண்டைநல் நாடு -சிறந்த தொண்டை நாட்டை;
நண்ணுகின்றார் -
சேர்பவரானார்கள்.

     கரிகுழல் தோகை: அடையடுத்த இருமடியாகு பெயர். 'தெண்ணீர் வயல்
தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்றவாறு மிகுந்து சான்றோரை
மிகுதியாகக் கொண்ட நாடாதலால் 'வார் புனல் தெண்திரைத் தொண்டை
நன்னாடு' என்றார்.                                             38

4632.குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம்.

     மருங்கு எலாம் -(அத் தொண்டை நாட்டின்) இடங்களெல்லாம்;குன்று
சூழ்ந்த கடத்தொடும் -
மலைகள் சூழ்ந்த சாரல்களும் (குறிஞ்சியும்);
கோவலர் மூன்றில் -
இடையர்களின் முற்றங்களை;சூழ்ந்த படப்பையும் -
சூழ்ந்துள்ள தோட்டங்களும் (முல்லை நிலமும்); மொய் புனல் சென்று
சூழ்ந்த -
மிக்க நீர்சுற்றிலும் பாய்ந்து நிறைந்துள்ள;கிடக்கையும் -
இடங்களான மருத நிலங்களும்;தெண் திரை -தெளிந்த அலைகளையுடைய;
மன்று சூழ்ந்த பரப்பும் -
மணல் வெளியான இடங்கள் சூழ்ந்த நெய்தல்
நிலமும் (உள்ளன).

     வினை முற்று (உள்ளன) வருவித்து முடிக்கப்பட்டது.  இதனால்
அத்தொண்டை நாடு நால்வகை நிலங்களும் கொண்டிருத்தலைக் கூறினார்.
கோவலர்: பசுக்களை மேய்த்துக் காப்பவர்.  படப்பை : வரகு முதலியன
விளைதற்குரிய தோட்டம்.  மன்று: வெளியான இடம். முன்றில் : இலக்கணப்
போலி.                                                       39

4633.சூல் அடிப் பலவின் சுளை தூங்க தேன்,
கோல் அடிப்ப வெரீஇ, குல மள்ளர் ஏர்ச்
சால் அடித் தரும் சாலியின் வெண் முளை,
தோல் அடிக் கிளை அன்னம், துவைப்பன.

     குல மள்ளர் -வேளாண் குலத்தவராய உழவர்கள்;கோல் அடிப்ப -
உழும்போது உழவு எருதுகளைக் கோலினால் அடிக்கையில்;தோல் அடிக்
கிளை அன்னம் -
தோல் செறிந்த அடிகளையுடைய