பக்கம் எண் :

642கிட்கிந்தா காண்டம்

கூட்டமான அன்னப் பறவைகள்;வெரீஇ -அஞ்சி;சூல் அடிப் பலவின் -
கருவை அடியிலே கொண்ட பலாமரத்தினது (வேர்ப்பலாவின்);சுளை தூங்கு
தேன் -
(பலாச்) சுளையிலிருந்து ஒழுகுகின்ற தேன் (பாய்ந்து);ஏர்ச்சால்
அடித்தரும் -
உழவுச் சாலின் இடங்களிலே முளைத்துள்ள;சாலியின்
வெண்முளை -
நெற்பயிரின் வெண்மையான முளைகளை;துவைப்பன -
(கால்களால்) மிதித்துத் துவைப்பனவாம்.

     உழவர்கள் ஏர் உழும் போது உழவு மாடுகளை அடித்துத் துரத்த
பக்கத்தேயிருந்த அன்னப் பறவைகள் அதனால் அஞ்சி அண்மையில் பலாச்
சுளைகளின் தேன்பாய முளைத்துள்ள வயல்களில் விரைந்தோட, அவற்றின்
முளைகள் சிதையும் என்பது கருத்து.  சூல்: கருப்பம்; இங்கு வேர் என்னும்
பொருளது, சூல் அடிப் பலா: வேர்ப் பலா. கோல்: தாற்றுக் கோல். இச்
செய்யுளில் மருத வளம் கூறப்பெற்றுள்ளது.                       40

4634.செருகுறும் கணின் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர்
இரு குறங்கு பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும்
;குயிலும் துயிலுமால்.

     செருகு உறும் கணின் -கூந்தல் வரை நீண்டுள்ள (மகளிரின்) கண்
போன்ற; தேம் குவளைக் குலம் -தேனையுடைய குவளைப் பூக்களின்
கூட்டம்;அருகு உறங்கும் -பக்கங்களில் உறங்குவது போலக்
குவிந்திருக்கும்;வயல் மருங்கு -நீர் நிறைந்த வயலிடங்களில்;ஆய்ச்சியர்
-
(அந்த நாட்டு) இடைச்சியரின்;இரு குறங்கு பிறங்கிய வாழையில் -
இரண்டு தொடைகளைப் போல விளங்கிய வாழை மரங்களிலே;குருகு
உறங்கும் -
நாரைகள் தூங்கும்;குயிலும் துயிலும் -(அங்கே) குயில்களும்
தூங்கிக் கொண்டிருக்கும்.

     ஆல்: ஈற்றசை. பகற்பொழுதில் குவளைமலர்கள் குவிந்து
குறுகியிருக்குமாதலால் அவை மகளிரின் குறுகிய கடை நோக்கிற்கு
உவமையாயின.  வாழை: மகளிர் தொடைக்கு உவமை; எதிர் நிலையணி: இந்த
அணியினால் குவளைமலர், வாழை என்ற இவற்றை விட மகளிரின் கண்ணும்,
தொடையும் மிகுந்த சிறப்புடையன என்பது பெறப்படும்.  முடித்துச்
செருகப்படுவதால் கூந்தல் 'செருகு' எனப்பட்டது; முதனிலைத் தொழிலாகு
பெயர்.                                                       41

4635.தெருவின் ஆர்ப்புறும் பல்
      இயம் தேர் மயில்
கருவி மா மழை
      என்று களிப்புறா;
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும்
      போகலா; -
மருவினார்க்கும் மயக்கம்
      உண்டாம்கொலோ?