பக்கம் எண் :

644கிட்கிந்தா காண்டம்

4637. நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்,
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி,
'புள்ளி நாரைச் சினை பொரியாத' என்று
உள்ளி, ஆமை முதுகின் உடைப்பரால்.

     நள்ளி வாங்கு -பெண் நண்டுகளைப் பிடிக்கின்ற;இளங் நடை
நவ்வியர் -
இளமைப் பருவத்து மான்போன்ற உழத்தியர்;வெள்ளி வால்
வளை -
ஒளியுடைய வெண்ணிறமான சங்குகள்;வீசிய வெண்மணி -ஈன்ற
வெண்மையான முத்துக்களை;புள்ளி நாரை -புள்ளிகளையுடைய
நாரைகளின்;பொரியாத சினை என்று -பொரிக்கப்படாத
முட்டைகளாகுமென்று;உள்ளி -நினைத்து;ஆமை முதுகின் உடைப்பர் -
(அந்த முட்டைகளை) அருகிலுள்ள ஆமைகளின் முதுகில் உடைப்பார்கள்.

     ஆல்: ஈற்றசை, உழத்திப் பெண்கள் வயல்களில் பெண் நண்டு பிடிக்கும்
போது அங்கே கிடக்கின்ற சங்குகள் ஈன்ற முத்துக்களை நாரைகளின்
முட்டைகள் என்று நினைத்து, அவற்றை ஆமைகளின் முதுகில் உடைப்பார்கள்
என்பது. மயக்கவணி. வெள்ளி வால்: ஒருபொருட் பன்மொழி. நள்ளி:
பெண்நண்டு: அலவன்; ஆண்நண்டு ஒப்பு: செந்நெல் அரிவார் சினையாமை
வன்முதுகில், கூனிரும்பு தீட்டும் குலக் கோசல நாடன்' - (நள:140)      44

4638.சேட்டு இளங் கடுவன் சிறு புன் கையில்
கோட்ட தேம் பலவின் கனி கூன்சுளை,
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன்
ஈட்டம் என்ன சென்று, ஈஇனம் மொய்ப்பன.

     சேட்டு இளங் கடுவன் -மிக  இளமையான ஆண்குரங்கின்;சிறு புன்
கையில் -
மிகச் சிறிய கையிலேயுள்ள;கோட்ட -கிளைகளிலுண்டான;தேம்
பலவின் கனி -
இனிய பலாப் பழத்தின்;கூன் சுளை - வளைந்த
சுளைகளிலே;தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு -இதழ்களையுடைய
மலர்கள் நிறைந்த சோலைகளில் மொய்க்கும்;தேன் ஈட்டம் என்ன -
வண்டுகளின் கூட்டம் போல;ஈ இனம் சென்று மொய்ப்பன -ஈக்களின்
கூட்டம் மொய்த்துக் கொள்ளும்.

     ஆண்குரங்குகளின் கையிலேயுள்ள பலாச் சுளையில் ஈக்கள்
மொய்ப்பதற்குச் சோலைகளிலுள்ள மலர்களில் வண்டுகள் மொய்த்ததை
உவமை கூறினார்.  சேட்டிளம், சிறுபுன் - ஒருபொருட் பன்மொழிகள். (சேடு +
இளம் - சேட்டிளம். தோடு + அமைந்த - தோட்டமைந்த).              45

சோழ நாட்டை அடைதல்

4439. அன்ன தண்டக நாடு கடந்து, அகன்
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்;