பக்கம் எண் :

646கிட்கிந்தா காண்டம்

     கரு நீர்க் காக்கை -கரிய நிறமுள்ள நீர்க் காக்கைகள்;குழுவும் மீன்
-
கூட்டமாகத் திரளும் தன்மையுள்ள மீன்கள்;வளர் - வளர்வதற்கு இடமான;
குட்டம் எனக் கொளா -
சிறு குட்டையென்று நினைத்து;எழுவு பாடல் -
(சுருதி கூட்டுவதற்கு) எழுப்புகின்ற பாடல்போல;இமிழ் கரும்பு எந்திரத்து -
ஒலிக்கின்ற கரும்பாலையிலிருந்து;ஒழுகு சாறு -பெருகுகின்ற கரும்புச்சாறு
(கரும்புப் பால்) நிறைந்த;அகல் கூனையின் -வாய் அகன்ற மிடாவில்;
ஊழ்முறை முழுகி -
ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி;முளைக்கும் -மேலே
கிளம்பும்.

     ஏ: ஈற்றசை. ஆலையாடிக் கரும்புச் சாறு நிரம்பிய மிடாவை நீர்க்
காக்கைகள் மீன்கள் நிரம்பிய குளங்களென்று மயங்கி அவற்றில் தம்
உணவாகிய மீன்களைக் கொத்தித் தின்பதற்காக மூழ்கி மூழ்கி இரை பெறாது
வெளிக் கிளம்பும் என்பது. சோழநாட்டின் வளம் புலனாகிறது.  இதுவும்
மயக்கவணி. கூனை: கரும்புச் சாறு காய்ச்சுவதற்குரிய வாயகன்றகலம்.   48

4642. பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல,
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல
வானரங்கள் மரங்களின் வைகுமால்.

     பூ நெருங்கிய -மலர்களில் படிந்து மொய்க்கின்ற;புள் உறு
சோலைகள் -
வண்டுகள் மிகுதியாகப் பொருந்திய சோலைகள்;தேன்
ஒருங்கு சொரிதலின் -
தேனை மிகுதியாகப் பொழிவதால் (அந்தத் தேனின்
பெருக்கைக் கண்டு);பல வானரங்கள் -(அச் சோலையில் வாழும்) பல
குரங்குகள்;தேர்வு இல -(உண்மையை) ஆராயாமல்;மீன் நெருங்குறும் -
மீன்கள் நிறைந்துள்ள;வெள்ளம் வெரீஇ -நீர் வெள்ளமென்று அச்சமுற்று;
மரங்களின் வைகும் -
(கீழே இறங்காமல்) மரக் கிளைகளிலேயே
தங்கியிருக்கும்.

     ஆல்: ஈற்றசை. சோலைகளிலுள்ள மலர்கள் தேனை மிகுதியாகச்
சொரிவதால் அந்தத் தேனின்பெருக்கை நீர்வெள்ளமென்று தவறாகக் கருதி
அச்சப்பட்டு அங்குள்ள வானரங்கள் யாவும் தரையில் இறங்காமல்
மரங்களிலேயே தங்கும் என்பது மயக்கவணி.  தேன்மிகுதி பெறப்படுவதால்
வீறுகோளணி.  வெருவி என்ற எச்சம் வெரீஇ யெனத் திரிந்தது -
சொல்லிசையளபெடை.                                         49

4643. தாறு நாறுவ, வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ, தூம்புகள்; மாங்கனி
நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ, செங்கழுநீர்அரோ.   *

     வாழைகள் -வாழை மரங்கள்;தாறு நாறுவ -குலைகள்தள்ளி மணம்
பரப்புவன;தூம்புகள் -மூங்கில்கள்;தாழையின் சோறு -தாழை மலர்களின்
சுண்ணப் பொடிகள் படியப் பெற்று; நாறுவ -