அந்த மணத்தையே வீசுவன;மாங்கனி -மாம்பழங்களின் நறுமணம்;நாறு நாறுவ -நாற்றுகளில் கமழ்வன;நாறு வளர்க்குறும் சேறு -அந்த நாற்றை வளரச் செய்யும் சேறு;செங்கழு நீர் நாறுவ -(அங்கே மலர்ந்துள்ள) செங்கழு நீர்ப் பூக்களின் நறுமணத்தையே பரப்புவன. அரோ: ஈற்றசை. தாழை மரமும் மூங்கிலும் ஒன்றற்கு ஒன்று பக்கத்திலிருப்பதால் தாழை மலரின் சுண்ணப் பொடிகள் படியப் பெற்று மூங்கில்கள் அந்த மணத்தை வீசுமாறும், நாற்றுகள் நன்றாக வளரப் பெற்ற நாற்றங்கால் செங்கழு நீர்மலரின்நறுமணத்தைப் பெறுமாறும் பெருமை வாய்ந்தது சோழநாடு என்பது. 50 சோழ நாடும் மலை நாடும் கடந்து பாண்டி நாடு அடைதல் 4644. | அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ, மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்; இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார். |
வினையின் நீங்கிய பண்பினர் -தீவினைகளிலிருந்து நீங்கிய நற் குணமுடைய வானர வீரர்கள்;அனைய -அத்தகைய வளங்கள் நிறைந்த; பொன்னி அகல் புனல் நாடு -காவிரிநதி பாயும் அகன்ற நீர்வளமிக்க சோழநாட்டை;ஒரீஇ -விட்டு நீங்கி;மனையின் மாட்சி குலாம் -இல்லறச் சிறப்புக்கள் மிகுந்து விளங்கும்;மலை மண்டலம் -மலைநாடாகிய சேர நாட்டை;மேயினார் -சேர்ந்தவர்களாகி (அதையும் நீங்கி);இனிய தென் தமிழ்நாடு -இனிமையான தமிழ் வழங்கும் தமிழ் நாடாகிய பாண்டி மண்டலத்தை;சென்று எய்தினார் -போய்ச் சேர்ந்தார்கள். காவிரியாறு பாய்ந்து செழுமை வாய்த்துள்ளதால் சோழநாடு 'புனல் நாடு' என்ற பெயருடன் விளங்குகிறது. சேர நாட்டவர் இல்லறவொழுக்கத்தில் தவறாது நடப்பவராதலால் அதற்கு 'மனையின் மாட்சி குலாம்' என்று அடைமொழி கொடுக்கப் பெற்றது. மலை மண்டலம்: மலைநாடு; சேரநாடு. செந்தமிழ்நாடு : பாண்டிநாடு. 51 4645. | அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு ஒத்திருக்கும் என்றால், உரை ஒக்குமோ - எத் திறத்தினும் ஏழ் உலகம் புகழ் முத்தும் முத் தமிழும் தந்து, முற்றலால்? * |
எத் திறத்தினும் -எல்லாவகையாலும்;ஏழ் உலகும் புகழ் -ஏழு உலகத்தவராலும் புகழப்படுகின்ற;முத்தும் -முத்துக்களையும்;முத் தமிழும் -(இயல் இசை நாடகம் என்னும்) மூவகைத் தமிழையும்;தந்து -கொடுத்து; முற்றலால் -பெருமை பெறுவதால்;அத் திருத் தகு நாட்டினை -செல்வ வளம் பெற்ற அந்தப் பாண்டி நாட்டை;அண்டர் நாடு -தேவலோகமானது; ஒத்திருக்கும் என்றால் -ஒத்திருக்குமென்று |