15. சம்பாதிப் படலம் இது சம்பாதியின் செய்தியை உணர்த்தும் பகுதியென விரியும். சம்பாதி: இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற போது அவனோடு எதிர்த்துப் போர் செய்ய சடாயுவின் தமையன். வானரர் தென்கடலைக் காணுகின்றார்கள்; பின்பு, ஏமகூடத்தில் பிரிந்த யாவரும் மயேந்திரத்தில் ஒன்றாகக் கூடுகின்றார்கள்; அந்த வானரர் சீதையைக் காணாமையினால் வருந்தியுரைக்கின்றார்கள். அங்கதன் தன்னோடு வந்தவரிடம் பேசுகின்றான்; பின்னர்ச் சாம்பவான்பேச அதற்கு அங்கதன் மறுமொழி கூறுகின்றான்; அதுகேட்ட சாம்பவான் அங்கதனுக்கு மறுமொழி கூறுகின்றான். பின்னர் அனுமன் பேசுகிறான். சடாயு மாண்டான் என்ற சொல்லைக் கேட்டுச் சம்பாதி வருந்துகிறான். சடாயுவைக் கொன்றவர் யார் என அவன் வினவுகின்றான்; பின் தன் வரலாற்றை எடுத்துரைக்கின்றான். அவனிடம் அவன் அண்ணன் சடாயு இறந்த விதத்தை அனுமன் உரைக்கிறான். அதைக் கேட்ட சம்பாதி புலம்புகின்றான். சம்பாதி அனுமனை வினவுவதும் அதற்கு அனுமன் விடையளிப்பதும் நிகழ்கின்றன. அதன்பின் சம்பாதி சடாயுவைப் பலவாறாகப் பாராட்டுகிறான். பின்னர்ச் சம்பாதி தன் அண்ணனுக்கு நீர்க் கடன் செய்கிறான். இராம நாமம் கேட்கச் சம்பாதியின் சிறகுகள் வளர்கின்றன; அதைக் கண்டு வியந்த வானரர் அந்தச் சம்பாதியின் முன்னைய வரலாற்றை வினவுகின்றார்கள். சம்பாதியும் தன் முன்னைய வரலாற்றையுரைக்கிறான். சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவித்து, வானரரிடம் விடைபெற்றுச் செல்லுகிறான். வானரர் தென் கடலைக் காணுதல் கலிவிருத்தம் வேறு 4648. | மழைத்த விண்ணகம் என முழங்கி. வான் உற இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து, 'இலங்கையாள், உழைத் தடங் கண்ணி' என்று உரைத்திட்டு, ஊழின் வந்து அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார். |
மழைத்த -நீருண்ட மேகத்தையுடைய;விண்ணகம் என -வானம் போல;முழங்கி -முழக்கம் செய்து கொண்டு;வான் உற -வானத்தைப் பொருந்துமாறு;இழைத்த -வீசியெறிகின்ற;வெண்திரைக் கரம் |