பக்கம் எண் :

680கிட்கிந்தா காண்டம்

 சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வுற,
தன்னால் உற்றது தான் விளம்புவான்:

     அன்னானைக் கடிது அஞ்சலித்து -(வானர வீரர்கள்) சிறகு பெற்ற
அந்தச் சம்பாதியை விரைந்து கை கூப்பி வணங்கி;முன்னால் உற்றது -
முன்காலத்து நடந்த வரலாறு;நீ முற்றும் ஓது -நீ முழுவதையும் கூறுவாய்;
எனச் சொன்னார் -
என்று வேண்டினார்கள்;சொற்றது சிந்தை தோய்வுற -
அவர்கள் கூறியது மனத்தில் பதிய;தன்னால் உற்றது -தனக்கு நேர்ந்ததை
(இறகு கரிந்த காரணத்தை);தான் -அந்தச் சம்பாதி;விளம்புவான் -
(பின்வருமாறு) சொல்வானாயினான்.

     சம்பாதியை வானரர்கள் அஞ்சலித்தது -அவன் இராமநாமத்தின்
பெருமையைத் தமக்குத் தெரிவித்தவனாதலாலும், இராமனுக்குப் பெரிய தந்தை
முறையாகி அவனது திருவருளைப் பெற்றவனாதலாலும், மிகவும் வயது
முதிந்தவனாதலாலும் என்பது.

     தன்னால் - உருபு மயக்கம்.                                 52

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

4700.'தாய் எனத் தகைய நண்பீர்!
      சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக்
      கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம்
      படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர்ஊர்
      அருணனுக்கு அமைந்த மைந்தர்;

     தாய் எனத்தகைய நண்பீர் -அன்பு காட்டுவதில் தாய் என்று
சொல்லத்தக்க நண்பர்களே!பாய்திரைப் பரவை ஞாலம் -வீசும்
அலைகளையுடைய கடலால் சூழப் பெற்ற நிலவுலகத்தில்;படல் இருள்
பருகும் பண்பின் -
பரவிய இருட்டை விழுங்கும் (போக்கும்) தன்மையுடைய;
ஆய் கதிர்க் கடவுள் -
சிறந்த கதிர்களோடு கூடிய சூரிய தேவனது;தேர்
ஊர் -
தேரைச் செலுத்தும் சாரதியான;அருணனுக்கு -அருணனுக்கு;
அமைந்த மைந்தர் -
பிறந்த மக்களாகிய;சம்பாதி சடாயு என்பேம் -
சம்பாதி சடாயு என்ற நாங்கள் இருவரும்;சேய் ஒளிச்சிறைய -அழகிய
நிறத்தைக் கொண்ட சிறகுகளையுடை;வேகக் கழுகினுக்கு -வேகமாகப்
பறக்கும் கழுகுகளுக்கு;அரசு செய்வேம் -அரசராக இருந்து ஆட்சி
செய்தவர்கள்.