சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவித்தல் 4705. | என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, 'எந்தாய்! ''புன் தொழில் அரக்கன் மற்று அத்தேவியைக் கொண்டு போந்தான், தென் திசை'' என்ன உன்னித் தேடி நாம் வருதும்' என்றார்; 'நன்று நீர் வருந்தல் வேண்டா; நான் அது நவில்வென்' என்றான். |
என்றலும் - என்ற சம்பாதி வினாவியவுடனே (அவ் வானரர்); இராமன்தன்னை ஏத்தினர் இறைஞ்சி -இராமபிரானைத் துதித்து வணங்கி (சம்பாதியை நோக்கி);எந்தாய் -எம் தந்தை போன்றவனே!புன்தொழில் அரக்கன் -இழிதொழிலைச் செய்யும் அரக்கனாகிய இராவணன்;அத் தேவியை - அந்த இராமபிரான் தேவியான சீதையை;தென் திசை - தென்திசை வழியாக;கொண்டு போந்தான் என்ன -கொண்டு சென்றான் என்று;உன்னி -நினைத்து;நாம் தேடி வருதும் என்றார் -நாங்கள் அச்சீதையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று கூறினர்;நன்று -(அது கேட்ட சம்பாதி) நல்லது;நீர் வருந்தல் வேண்டா -நீங்கள் வருந்தாதீர்கள்; நான் அது நவில்வென் -நான் இதுபற்றி அறிந்துள்ளதைக் கூறுவேன்; என்றான் -என்று கூறத் தொடங்கினான். பிறர் மனைவியைக் கவரும் தீக்குண முடையவனாதலால் இராவணனைப் 'புன் தொழிலரக்கன்' என்றார். மற்று: அசை. 58 4706. | 'பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன் பற்றிப் போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை; புக்கு, வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறையகத்து வைத்தான்; ஏகுமின் காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி, இன்னும். |
பாகு ஒன்று குதலையாளை -சர்க்கரைப் பாகு போன்ற மழலைச் சொற்களையுடைய சீதையை;பாதக அரக்கன் -கொடிய அரக்கனான இராவணன்;பற்றிப் போகின்றபொழுது -கவர்ந்து செல்லுகின்ற போது; கண்டேன் -(நான்) பார்த்தேன்;இலங்கை புக்கனன் -(அவன்) இலங்கையிற் போய்ச் சேர்ந்தான்;புக்கு -(அங்குச்) |