பக்கம் எண் :

692கிட்கிந்தா காண்டம்

தாக்கியதால்;இளைத்து -(நான்) வலிமை குன்றி;தாள் உலைவுற்றேன் -
என் கால்கள் வலியெடுத்து வருந்தினேன்;

     திரிவிக்கிரம அவதார காலத்தில் உலகமுழுவதும் நிறைந்த திருமாலின்
திருவடியை வணங்கிக் கொண்டே பலமுறை பூமியை வலம் வருகையில்
மேருமலை எனது காலிற்பட்டுக் கால் சிறிது ஊனமானதால் இப்போது
கடல்கடக்கும்  வலிமையில்லாதவன் ஆயினேன் என்று சாம்பவான் கூறினான்
என்பது.

     மொய்ம்பு: தோள்.

     எட்டு மாதிரங்கள்: கிழக்கு முதலான பெருந்திசைகள் நான்கு;
தென்கிழக்கு முதலிய கோணத் திசைகள் நான்கு.

     ஐந்து, ஆறு ஆகிய ஒரு செய்யுட்களும் ஒரு தொடராய் இயைந்து
பொருள் முடிவு கொண்டதால் ஆறாவது செய்யுளின் ஈற்றிலுள்ள 'நாலு
முகத்தான் உதவுற்றான்' என்ற தொடர் இங்கு எழுவாயாகக்
கொள்ளப்படுதற்குரியது.                                       5

4716.'ஆதலின், இப் பேர் ஆர்கலி
      குப்புற்று, அகழ் இஞ்சி
மீது கடந்து, அத்
      தீயவர் உட்கும் வினையோடும்,
சீதைதனைத் தேர்ந்து, இங்கு உடன்
     மீளும் திறன் இன்று' என்று
ஓதி இறுத்தான் -
      நாலுமுகத்தான் உதவுற்றான்.

     ஆதலின் -ஆதலால்;இப்பேர் ஆர்கலி -இந்தப் பெரிய கடலை;
குப்புற்று -
தாவித் தாண்டி;அகழ் இஞ்சி மீது - அகழியைச் சார்ந்த
(இலங்கையில்) மதில்கள் மேல்;கடந்து -கடந்து சென்று;தீயவர் உட்கும்
வினையோடும் -
கொடியவர்களான அந்த அரக்கர்கள் அஞ்சிநடுங்கும் வீரச்
செயலுடனே;சீதைதனைத் தேர்ந்து -சீதையைத் தேடிக் கண்டுபிடித்து;
இங்கு உடன் மீளும் -
இங்கே உடனே திரும்பி வரக்கூடிய;திறன் இன்று
என்று -
வலிமை எனக்கு இல்லையென்று;ஓதி இறுத்தான் -
சொல்லிமுடித்தான்;நாலு முகத்தான் உதவுற்றான் -நான்கு
முகங்களையுடைய பிரமதேவன் அருளிய சாம்பவான்.

     ஆர்கலி: நிறைந்த ஓசையையுடைய கடல் - காரணப் பெயர்: வினைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

     குப்புதல்: குதித்தல்; தாண்டிக் கடத்தல்.  அகழ்: அகழப்படுவது -
முதனிலைத் தொழிற் பெயர். இஞ்சி : மதில்.                         6

     அனுமனே தக்கவன் எனச் சாம்பவன் உரைத்தல்

4717.'யாம் இனி இப்போது ஆர் இடர்
      துய்த்து, இங்கு, ''இனி யாரைப்