அறுசீர் ஆசிரிய விருத்தம் 4731. | ''' இலங்கையை இடந்து வேரோடு இவ் வயின் தருக'' என்றாலும், ''விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி, பொலங் குழை மயிலைக் கொண்டு போது'' எனப் புகன்றிட்டாலும், கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்! * |
இலங்கையை -(அனுமன் சாம்பவானைப் பார்த்து) இலங்கை நகரை; வேரோடு இடந்து -வேரோடு பெயர்த்தெடுத்து;இவ்வயின் தருக என்றாலும் -இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று (நீங்கள்) கூறினாலும்;விலங்கினர்தம்மை எல்லாம் -எதிர்த்துத் தடுப்போரையெல்லாம்;வேரொடும் விளிய நூறி -அடியோடு அழியுமாறு பொடிப் பொடியாக்கி;பொலங் குழை மயிலை -பொன்னாற் செய்த குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை;கொண்டு போது என -எடுத்துக் கொண்டுவா என்று;புகன்றிட்டாலும் -சொன்னாலும்; உரைத்த மாற்றம் முடிக்குவல் -(நீங்கள்) கூறிய சொற்படியே செய்து முடிப்பேன்;கடிது காண்டிர் -(அதை) விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்; கலங்கலீர் -(ஆகவே) கலங்காதீர்கள். கடலைக் கடந்து சீதையைக் கண்டு வருதல் எவ்வாறு முடியுமென்ற சிந்தை உங்களுக்குச் சிறிதும் வேண்டா என்ற கருத்துப்படக் 'கலங்கலீர்' என்றார். முடிக்குவல்: தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. 21 4732. | 'ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக, ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப, இருங்கடல் இனிது தாவி, வாசவன் முதலோர் வந்து மலையினும், இலங்கை வாழும் நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல்; பின்னும், |
ஈசன் -திருமால்;மண் அளந்தது ஏய்ப்ப -உலகத்தையளந்தது போல;ஓசனை ஒன்று நூறும் -(இங்கிருந்து இலங்கைவரை) நூறு யோசனை தூரப் பரப்பையும்;உள் அடி உள்ளது ஆக -உள்ளங் காலின் ஓரடி வைப்புக்குள் அடங்கும்படியாக;இருங்கடல் இனிது தாவி -பெரிய கடலை மிக எளிதாகத் தாண்டி;வாசவன் முதலோர் -இந்திரன் |