அனுமன் பேருருவங்கொண்டபோது மேகமண்டலம் அவனது தாளினிடத்து இருந்ததென்பார், 'மின்னெடுங்கொண்டல் தாளின் வீக்கிய கழலினார்ப்ப' என்றார். மேருமலை இப்பூமியின் இடையே நின்று இந்த அண்டத்தைத் தாங்கும் பொன்தூண் போன்றது என்பது புராண நூல் துணிபு. அனுமன் பொன் நிறத்தாலும், வானுயர்ந்த தோற்றத்தாலும் மேரு மலைக்குஉவமை. 29 |