பக்கம் எண் :

710கிட்கிந்தா காண்டம்

மிகைப் பாடல்கள்

குறிப்புரை

2. அனுமப் படலம்

312. அன்ன ஆம் என வெருவி,
      அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம்
      இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில்
      எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின்
      நாடி மாருதி மொழியும்:

     முழை -குகை                                          2-1

313.தாரன், நீலனை, மருவு
     தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு
      மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு
      பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின்
      ஆகுமாறு உறல் கருதி,

     இரவி சுதன் -சூரியன் மகனாகிய சுக்கிரீவன்                 2-2

314.மானை நாடுதல் புரிஞர் -
      'வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு' என மறுகி, ஆவி
      சோர் நிலையர், தொடர்