பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்711

 ஏனைவானரர் சிலரும் ஏக,
      மா முழையில், முழு
ஞான நாதரை, அறிவின்
      நாடி, மாருதி மொழியும்:

     மான் - மான்போல்வாளாகிய சீதை; நாடுதல் புரிஞர் - தேடுதலாகிய
பணியைச் செய்வோர்.                                          2-3

315. உலகு தங்கிய பல தொல்
      உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்;
      இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்;
      அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள்
      வெகுளிகொண்டு அடு விறலர்.

     இங்கிதம் - குறிப்பு; விஞ்சைகள் - வித்தைகள்               8-1

316.சிவனும் அம்புய மலரில்
      அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி
      எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு
      தொடரு செங்கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன்
      உலகில் வந்ததுகொல் என.

     அம்புய மலர் - தாமரை மலர்; இந்திரை - திருமகள்; கொழுநன் -
கணவன்.                                                   8-2

317.'மற்றும் இவ் உலகத்து உள்ள
      முனிவர், வானவர்கள், ஆர், இச்
சொல் திறம் உடையார்? மற்று
      எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி
      மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும், பேர்
      ஆற்றல் அரிது மன்னோ.'

     சுருதி - வேதம் (கேட்கப்படுவது); மாணி - பிரமசாரி          19-1