பக்கம் எண் :

712கிட்கிந்தா காண்டம்

318.இருக்கண் மா மைந்தரான
     வாலியும், இளவல்தானும்,
செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின்
      சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங்
      குவட்டு இறுத்தான் தன்பால் -
மருக் குலாம் தாரீர்! - வந்தது
      அவன் செய் மா தவத்தின் அன்றோ?

     இருக்கண் - பிரமன்; நெடுங்குவடு - பெரிய மலை.           21-1

3. நட்புக் கோட் படலம்

319.'பிரிவு இல் கான்
      அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும்,
      காதொடும், நாசியை
அரியினார்; அவள்
      சொல, திரிசிராஅவனொடும்,
கரனொடும், அவுணரும், காலன்
      வாய் ஆயினார்.

     அரியினார் - அறுத்தனர                                10-1

320. கடுத்து எழு தமத்தைச் சீறும்
      கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான்
      ஓர்வைகலின், வரம்பு தோன்றப்
படித்தவன் வணங்கி, வாழ்த்தி,
      பருமணிக் கனகத் தோள் மேல்
எடுத்தனன், இரண்டுபாலும்
      இருவரை; ஏகலுற்றான்.

     நமம் - இருள்.                                         29-1

321.'இவன், உலைந்து உலைந்து,
      எழு கடல் புறத்து
அவனியும் கடந்து,
      எயில் அடைந்தனன்;
கவனம் ஒன்று இலான்,
      கால் கடாயென,