பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்713

 அவனி வேலை ஏழ்,
      அரியின் வாவினான்.

     உலைந்து - தோற்று; எயில் - மதில் (இங்கே புற அண்டத்து
எல்லையிலுள்ள மதில்); கவனம் - கலக்கம்; கால் - காற்று; வாவினான் -
தாவினான்.                                                64-1

322.'என்று கால்மகன்
      இயம்ப, ஈசனும்,
''நன்று நன்று'' எனா,
      நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன்
     சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு
      அறிந்தனன்கொலாம்?'

     கால்மகன் - வாயு தேவனின் மகன் (அனுமன்); ஈசன் - (இங்கே)
இராமபிரான்.                                               64-2

323. இனையவா வியந்து
      இளவல் தன்னொடும்,
வனையும் வார் கழல்
      கருணை வள்ளல், பின்பு,
'இனைய வீரர் செய்தமை
      இயம்பு' என,
புனையும் வாகையான்
      புகறல் மேயினான்:

     இனையவா(று) - இவ்வாறு                                64-3

324.'நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்,
செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான்.

     நக்கரம் - முதலை.                                      64-4

325.'திறத்து மா மறை அயனொடு
     ஐம்முகன், பிறர், தேடிப்
புறத்து அகத்து உணர் அரிய
      தன் பொலன் அடிக் கமலம்