| உறச் சிவப்ப இத் தரைமிசை உறல், அறம் ஆக்கல், மறத்தை வீட்டுதல், அன்றியே, பிறிது மற்று உண்டோ?' |
ஐம்முகன் - சிவபிரான். 70-1 326. | 'நீலகண்டனும், நேமியும், குலிசனும், மலரின்- மேல் உளானும், வந்து, அவன் உயிர்க்கு உதவினும், வீட்டி ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென்; அனலோன் சாலும், இன்று எனது உரைக்கு அருஞ்சான்று' எனச் சமைந்தான். |
நீலகண்டன் - சிவபிரான்; நேமி - திருமால்; குலிசன் - (வச்சிரப் படையான்)இந்திரன். 71-1 327. | 'மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள் எண்ணில் ஏழ் உள; அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன், விண்ணுள் வாலிதன் ஆர் உயிர் விடுக்கும்' என்ற உலகின்- மண் உளோர்கள்தாம் கழறிடும் கட்டுரை உளதால். |
அரா - பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால் துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது செய்யுள்). 5. துந்துபிப் படலம் 328. | புயலும் வானகமும், அப் புணரியும், புணரி சூழ் அயலும் வீழ் தூளியால் அறிவு அருந்தகையவாம் மயனின் மாமகனும் வாலியும் மறத்து உடலினார். |
|