பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்715

 இயலும் மா மதியம் ஈர்
      ஆறும் வந்து எய்தவே.'

     புயல் - மேகம்; புணரி - கடல்.                            9-1

7. வாலி வதைப் படலம்

329.பேர்வுற வலிக்கவும் மிடுக்கு
      இல் பெற்றியார்
நோவுற உலந்தனர்; அதனை
      நோக்கி, யான்
ஆர்கலிதனைக் கடைந்து,
      அமுது கொண்டனென்;
போர் வலி அழிந்து போய்,
      புறம் தந்து ஓடலேன்.

     பேர்வுற - அசைந்திட; வலிக்க - இழுக்க; மிடுக்கு - வலிமை;
ஆர்கலி - கடல்.                                           27-1

330. ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங்
      கதிர்ப் புதல்வன் மீண்டும்
ஏற்றிய சிலை இராமன் இணை
      அடி இறைஞ்சி வீழ்ந்து,
'தோற்றுமுன், ஆவி கொண்டு, இத்தொல்
      உறை இருந்தேன்; உந்தன்
மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்;
      உடல்வலி மாய்ந்தது' என்றான்.

     வாலிக்கு ஆற்றலன் ஆகி - வாலியின் வலிமைக்கு எதிரே
தாங்கமுடியாதவனாகி; கதிர்ப்புதல்வன் - கதிரவன் மகன் (சுக்கிரீவன்).61-1

331. என்றலும், இராமன், 'நீங்கள்
      இருவரும் எதிர்ந்த போரில்,
ஒன்றிடும் உடலினாலே உருத்தெரிவு
      அரியது ஆகி,
கொன்றிடு பாணம் ஏவக்
      குறித்தலேன்; குறியால் செய்த
மன்றலர் மாலை சூட்டி
      ஏவுதும், மறித்தும்' என்றான்.

                                                   61-2