பக்கம் எண் :

716கிட்கிந்தா காண்டம்

332.இராமன் அஃது உரைப்பக் கேட்டே,
      இரவி சேய் ஏழது ஆகும்
தராதலத்து அதிர ஆர்த்து, தம்
      முனோன் முன்னர்ச் செல்ல,
பராபரம் ஆய மேருப்
     பருப்பதம் தோற்றிற்று என்ன
கராதலம் மடித்து வாலி கனல்-
      துகள் சிவந்து காட்ட.

     பருப்பதம் - மலை (பர்வதம்); கராதலம் - கை.              61-3

333.சிவந்த கண்ணுடை வாலியும்,
     செங்கதிர்ச் சேயும்,
வெவந்தபோது, அவர் இருவரும்
      நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால்
      எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர்
     உயிர் அந்தகற்கு அளிப்போன்.

     வெவந்தபோது - பகை வெம்மையால் மோதிய போது; அந்தகன் -
இயமன்.                                                    62-1

334.வெற்றி வீரனது அடு கணை,
     அவன் மிடல் உரத்தூடு
உற்றது; அப்புறத்து உறாதமுன்,
      உறு வலிக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
      பிணித்து, அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு
     மறலியும், சிரதலம் குலைந்தான்.

     மிடல் உரம் - வலிமையான மார்பு; உறு வலி - மிகுந்த வலிமை.
                                                          66-1

335. ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
      உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை;
      வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்;