பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்717

 தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத்
      தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
      நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே!

     செற்றம் - பகைமை; தாதை - தந்தை.                    89-1

336.மா வலச் சூலியார்
      வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல், நின்
      ஒரு தனி்ப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்;
      அப் பொருளை ஆம்
தேவ! நிற் கண்ட எற்கு
      அரிது எனோ, தேரினே?

     ஆவலிப்பு -பெருமிதம்.                                128-1

337. இடைக்கலம் அல்லன்; ஏவியது
      ஓர் பணி
கிடைத்த போது, அது
      செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப்பழம் பேர்
      அருளே! நினது
அடைக்கலம் - அடியேன்
      பெற்ற ஐயனே.

     இடைக்கலம் -இடையே வந்தவன்.                       158-1

8.  அரசியற் படலம்

338.வள்ளலும், அவண் நின்று ஏகி,
      மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமிக் குன்றத்து
      ஒருசிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி,
      அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி,
      இனிதினின் இருந்த காலை,

     வெள்ள வான் குடுமி -நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்;
ஒரு சிறை -ஒருபக்கம்