பக்கம் எண் :

718கிட்கிந்தா காண்டம்

10. கிட்கிந்தைப் படலம்

339.சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான்.

     வென்றி வீரன் -வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல்
வினை -
இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை -
அவனை (அங்கதனை).                                        25-1

340. நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே.

     ஆழிநாதன் -சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே
இராமபிரான்);மீளி -வலிமையுடையவன்.                         32-1

341.மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன் -
எங்கள்பால்
பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே.

     சேமித்த மென்மை -அடைந்து வைத்த சிறுமை;தேவரான் -
தேவனாகிய இலக்குவன்.                                       34-1

342. அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
'இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு' என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான்.

     அன்னை -தாயாகிய தாரை;மாசு இலான் -குற்றம் இல்லாத
அங்கதன்.                                                   77-1

343.சேய்உயர் கீர்த்தியான்,
      'கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின்
      புகுந்த யாவையும்,
'ஓய்வுறாது உணர்த்து' என,
      உணர்த்தினான் அரோ,
வாய்மையா - உணர்வுறு
      வலி கொள் மொய்ம்பினோன்.