சேய் உயர் கீர்த்தியான் -நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன். 137-1 11. தானை காண் படலம் 344. | அன்று அவண் வானரச் சேனை யாவையும், வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும், குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென, வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே. |
எண்கின் வீரர் -கரடி வீரர்கள். 1-1 345. | இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க, முன் போகச் சொன்ன ஆயிர கோடியில் தூதம் தம் திறத்தால், பன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம் கவிப் படை பயில, - பொன்னின் வார் கழல் இடபன் - அக் கிட்கிந்தை புகுந்தான். |
அவர் இருக்க -இராம இலக்குவர்கள் காத்திருக்க;ஆறு இரு வெள்ளம் -பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை -குரங்குப் படை. 1-2 346. | 'தாமரை பெருந் தவிசு உறை சதுமுகக் கடவுள் ஓம அடஙகியில் உதித்தன, உலப்பு இல கோடி ஆம்' எனப் புகல் வானரத் தானை அங்கு அணித்தா, - மா வயப் புயத்து எறுழ் வலி மயிந்தன் - வந்து அடைந்தான். |
தவிசு -இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் -நான்கு முகங் கொண்ட பிரமதேவன்;ஓம அங்கி -வேள்வித் தீ;தனை -சேனை. 1-3 347. | கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய முன் வாலி பொங்கும் ஆணையின் எண்திசைப் பொருப்பினும் பொலியத் |
|