| தங்கி வாழ் கவித் தானை அங்கு ஆறு-ஐந்து கோடி வங்க வேலையின் பரந்திட, - வசந்தன் - வந்து அடைந்தான். |
கங்கை சூடி -சிவபெருமான்; வங்க வேலை -கப்பல்கள் இயங்கும் கடல். 1-4 348. | வட்ட விண்ணையும் மண்ணையும் எடுக்குறும் வலிய, நெட்டு அராவினைச் சினத்தொடு பிடுங்குவ நிமிர்வ, அட்ட திக்கையும் மறைப்பன, ஆயிரம் கோடி துட்ட எண்கு வெம் படையொடு தூமிரன் வந்தான். |
நெட்டு அரா -நீண்ட பாம்பு (ஆதிசேடன்). 19-1 349. | ஓங்கு மேருவை வேருடன் பறித்து, ஒரு கையால் வாங்கும் எண் அருங் கோடி மேல் மந்தியின் சேனை பாங்கு சூழ்தர, பரவை அது ஆம் எனப் படியில் ஆங்கு உயர்ந்திடு கபாடனும் அக் கணத்து உற்றான். |
பரவை -கடல்;படி - உலகம். 19-2 350. | வீரை ஏழையும் கலக்குறு மிடுக்கினர், விரிந்த பாரை வேரொடும் பறித்திட வேண்டினும் பறிப்பர், ஈர் - ஐஞ்ஞூற்று எழு கோடி வானரப் படை ஈண்ட, தாரையைத் தந்த ததிமுகன் நொடியினில் சார்ந்தான். |
வீரை -கடல்;தாரையைத் தந்த ததிமுகன் -தாரையின் தந்தையாகியததிமுகன் 19-3 |