பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்721

12.  நாட விட்ட படலம்

351.சாரும் வீரர் சதவலி தம்மொடும்
கூரும் வீரர்கள் யாவரும் கூடியே,
நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால்.

     சதவலி சாரும் வீரர் தம்மொடும் -சதவலி என்ற தலைவனைச்
சார்ந்துள்ள வீரர்களோடும்;கூரும் -(வலிமையால்) மிகும்.            9-1

352.குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
வட திரைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால்.

     ஓர் மதி தொடர -ஒருமைப்பட்ட அறிவு உடன் தொழிற்பட    10-1

353.குடதிசைக் கண்
     இடபன் குணதிசைக்
கடலின் மிக்க
      பனசன் சதவலி
வடதிசைக்கண் அன்று ஏவினன் -
      மான மாப்
படையின் வெள்ளத்துடன்
      செலப் பான்மையால்.

     மான மாப் படை -தன்னிலையில் தாழாத பெரும்படை       10-2

354.என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
அன்று மாருதிஆம் முதல் வீரர்க்குத்
துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்:

     கதிரோன் மகன் -சுக்கிரீவன்                           10-3

13.  பிலம் புக்கு நீங்கு படலம்

355.'இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?' என
அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது;