பக்கம் எண் :

722கிட்கிந்தா காண்டம்

     அயிர்க்கலாவது -ஐயப்படுதற்கு உரியது;அயிர்த்தல் -சந்தேகித்தல்.
                                                           12-1

356.வச்சிரமுடைக் குரிசில் வாள்
      அமரின் மேல் நாள்,
மெச்சு அவுணர்
      யாவரும் விளிந்தனர்களாக,
அச்சம் உறு தானவர்கள்
      கம்மியனும் அஞ்சி,
வைச்ச பிலமூடிதன் மறைந்து
      அயல் இருந்தான்.

     வச்சிரமுடைக் குரிசில் -இந்திரன்;தானவர் தச்சன் -அசுரத்
தச்சனானமயன்.                                              57-1

357.மாதுஅவள் உயிர்த்த மகவோர்
      இருவர்; வாசப்
போது உறை நறைக் குழல் ஒருத்தி; -
      புகழ் மேலோய்! -
ஏதம் உறு மைந்தர் தவம்
      எய்த அயல் போனார்;
சீதள முலைச் சிறுமி
      தாதையொடு சென்றாள்.

     மாது -சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது;போது -விரியும்
பக்குவத்திலுள்ள பூ;நறைக் குழல் -மணமுள்ள கூந்தல்.            61-1

358. மத்த நெடு மா களிறு
     வைத்த குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி,
      அயல் சென்றான்;
வித்தகனும், ஆயிர
      விலோசனனும், மேன்மேல்,
முத்த நகையாளை நனி
     நோக்கினன், முனிந்தான்.

     களிறு -யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்);குலிசி -
வச்சிராயுதமுடைய இந்திரன்;ஆயிர விலோசனன் -இந்திரன்.       61-2

359.மேருசவ் வருணி எனும்
      மென்சொலினள், விஞ்சும்