பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்723

 ஏர் உறு மடந்தை, யுகம்
      எண்ண அரு தவத்தாள்,
சீர் உறு சுயம்பிரபை,
      ஏமை செறிவு எய்தும்
தாருவளர் பொற்றலமிசைக்
      கடிது சார்ந்தாள்.

     ஏர் -அழகு.                                          71-1

360.மேரு வரை மா முலையள்,
      மென்சொலினள், - விஞ்சு
மாருதியினைப் பல உவந்து,
      மகிழ்வுற்றே, -
ஏர் உறு சுயம்பிரபை,
      ஏமை நெறி எய்த,
தாரு வளர் பொன் - தலனிடைக்
      கடிது சார்ந்தாள்.

     'மேரு சவ்வருணி' என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும்
ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள்.  சொற்களிலே சில மாற்றம்.
                                                         72-2

14.  ஆறு செல் படலம்

361.இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.

     இருவரும் -அங்கதனும் அசுரனும்;நிருதன் -அசுரன்;கதுவ -
சேர்ந்திட                                                   7-1

362.வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான்.

     ஆசு இல் -குற்றம் இல்லாத                             7-2

363.குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
நின்ற அங்கதன், நெடு மராமரம்
ஒன்று வாங்கி மற்றவன் ஒடிந்திடச்
சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே.