பக்கம் எண் :

724கிட்கிந்தா காண்டம்

364. ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார்.

     ஓகை -உவகை;சேகு -திண்மை (இங்கே வலிய நிலம்)        45-1

365.இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார்.

     புந்தியார் -அறிவுடையார்                                45-2

366.'செல்வர்' என்றும், 'வடகலை,
      தென் தமிழ்ச்
சொல், வரம்பினர்'
      என்றும், 'சுமடரைக்
கொல்வர்' என்றும், 'கொடுப்பவர்'
     என்றும், - அவ்
இல் வரம்பினர்க்கு ஈ
      தேனும் ஈட்டதே.

     சுமடர் -கீழ்மக்கள்                                      45-3

15.  சம்பாதிப் படலம்

367.யாவரும் அவ் வயின்நின்றும், 'மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்' என்பது விளம்பினார்அரோ.

     பூவரும் -தாமரை மலரின் வைகும்;அருந்ததி பொருவும் -
அருந்ததியைப் போன்ற                                          3-1

368. அன்னதோர் அளவையின் அங்க
      நாடு ஒரீஇ,
தென் மலைநாட்டினைத் தேடிச்
      சென்று, உடன்
இன் இசைத் தலைவரோடு
      இரண்டு வெள்ளமும்