பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்725

 மன்று மா மயேந்திரத்
      தலத்து வந்ததால்.

     இசை -புகழ்                                          3-2

369. தாழந்த மா தவத்து
      உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென்; சிறைகள் தீய,
      வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற,
      உயிர்ப்பொறை போற்றகில்லாது,
ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந்
      தவன் எதிர்ந்து தேற்றி;

     போழ்ந்தன துன்பம் -பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை -
உயிர்ச்சுமை.                                                56-1

370.'  ''கற்றிலார் போல உள்ளக்
      களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி, மீப் போய்,
      ஆதபத்து உனது மேனி முற்று
அழல் முருங்க, மண்ணை முயங்கினை;
     இனி என்? சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது
      இகழ்வது மாலைத்து அன்றால்.

     மீ -மேலே;ஆதபம் -வெயில்;முருங்க -எரிய;மாலைத்து
அன்று-
இயல்பு அன்று                                      56-2

371.''களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக்
      கபடன் வவ்வி, அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற
      வானரர், இராம நாமம்
விளித்திட, சிறை வந்து ஓங்கும்;
     வெவ்வுயிர்த்து அயரல்'' என்று,
அளித்தனன்; அதனால் ஆவி
      ஆற்றினேன் - ஆற்றல் மொய்ம்பீர்!

     அயரல் -தளராதே;அளித்தனன் -அருளினான்.           56-3

372.'அன்றியும், அலருள் வைகும்
      அயனைநேர் முனிவர், வாய்மை