பக்கம் எண் :

726கிட்கிந்தா காண்டம்

 நன்றிகொள் ஈசற் காண்பான்
      நணுகலும், வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது
      யோகத்தின் உணர்ச்சி பேணி,
''பொன்றுதல் ஒழிமின்; யானே
      புகல்வது கேண்மின்'' என்றான்.

     அயனை நேர் முனிவன் -நான்முகனை ஒத்த உலோக சாரங்க
முனிவன்                                                  56-4

373.'   ''தசரத ராமன் தேவர் தவத்தினால்,
      தாய் சொல் தாங்கி,
கச ரத துரகம் இன்றிக்
      கானிடை இறுத்த காலை,
வசை தரும் இலங்கை வேந்தன்
      வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால்,
      சிறகு பெற்று எழுதி'' என்ன,

     கச, ரத, துரகம் -யானை, தேர், குதிரை;கவிகள் -குரங்குகள் 56-5

374.'எனக்கு உணவு இயற்றும் காதல்
      என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன்
      மூதூர் வடதிசைநின்று செல்வான்,
நினைக்கு முன் திருவோடு அந்த
      நீசனை நோக்கி, ''எந்தை -
மனககு இரை எய்திற்று'' என்னா,
     சிறகினால் தகைந்து கொண்டான்.

     தகைந்து -மோதி                                       58-1

375.காமத்தால் நலியப்பட்டு,
      கனங்குழைதன்னைக் கொண்டு
போம்மத்தா! போகல்; எந்தை புன்
      பசிக்கு அமைந்தாய்'' என்று,
தாமத் தார் மௌலி மைந்தன்
      தடுத்து இடை விலக்க, நீசன்