| நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி மீண்டு, எனக்குச் சொன்னான்.' |
மத்தா -உன்மத்தனே;போகல் -போகாதே;நாமத்தால் - அச்சத்தால் 58-2 376. | முன்னர் அந் நிசாகர முனி மொழிந்ததும், பின்னர் அச் சுபார்சுபன் பெலத்து இராவணன் - தன்னொடும் அமர் பொரச் சமைந்து நின்றதும், கொன் இயல் சனகியைக் கொண்டு போனதும், |
பெலத்து -வலிமையுடைய (பலம்);கொன் இயல் -பெருமைப் பண்பு 58-3 377. | நினைந்து சம்பாதியும், நீதி யாவையும் இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே; நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்; வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர். |
இனைந்தனன் -வருந்தினான் 58-4 16. மயேந்திரப் படலம் 378. | புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி விண் போந்த பின்னர், தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு அது சாம்பன் சிந்தித்து, உள்ளவர் தன்னில் வல்லார் யார் என உன்னி, யாண்டும் தள்ளரும் புகழோன் வாயுத் தனையனை நோக்கிச் செப்பும்: |
புள்ளரசு -பறவைகளுக்கு அரசனான சம்பாதி;வாயுத் தனையன் - வாயுவின் மகனாகிய அனுமன். 379. | ஆயவன் அங்குப் போகிய பின்னர், அகமீதே நோய் உறு தன்மைத்து ஆகிய வீரர்தமை நோக்கி, |
|