| தூய மனத்தன் ஆகிய வாலி தரு தொன்மைச் சேயும் அவர்க்கே செப்பினன், நாடும் செயல் ஓர்வான். |
சேய் -மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர் ஏட்டில் 'புள்ளரசு' எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் 'ஆயவன்' எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.) 380. | 'ஆரியன் மின்னி்ன் பேர் எழில்கூறும் அமைவாலும், ''காரியம் உன்னால் முற்றும்'' எனச் சொல் கடனாலும், மாருதி ஒப்பார் வேறு இலை என்னா, மனம் எண்ணி, சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும், என்றே' |
மின்னின் -மின்னல் போல்வளாகிய சீதை. 8-1 381. | நாலு மறைக்கும் வேலியும் ஆகி, நடு நிற்கும் சீலம் மிகுந்தீர்! திங்கள் மிலைச்சித் திகழ் வேணி, ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்! அது போதில் காலின் நிறைக்கோ காலனும் ஆகக் கடிது உற்றீர். |
திங்கள் மிலைச்சி -சந்திரன் சூடி;வேணி - சடை; ஆலமிடற்றான் -நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான் 18-1 382. | ஆதியர் இப் புத்தேள் அடிப்பாரித்து அணவு ஆதற்கு ஓது கருத்தில் சால நினைத்திட்டு, ஒழிவு இல்லாப் போது தளத்தில் புக்கிய செய்கைத் திறனாலே சாதல் கெடுத்துத் தான் அழியாதீர் அதனாலே. |
பாரித்து -விரும்பி;அணவு ஆதற்கு -அணுகுவதற்கு 18-2 |