தன் மாத்திரைகள்.‘தன்மாத்திரைகள் ஐந்தினையும் ஓரொன்று இரண்டாய்ப் பகுத்து, ஒன்றை நன்னாலாக்கித் தன்பாதி ஒழிந்த நாலின் உடன்கூட்டி இன்னே யல்லாதவை நான்கின் இயல்பிற்கூட்ட, வானாதி பின்னே தூல பூதமெனப் பிறக்கும்’ என்று பிரம்ம கீதை பேசும். நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம்.... கற்பனையினாலே செனித்த என்று கைவல்ய நவநீதம் பேசும். உள்பொருளின்கண்இல்லாத பொருளைக் காண்பதை ‘ஆரோபம்’,‘அத்தியாயம்’,‘கற்பனை’ என்பர். இல்பொருளைக் காணாது உள் பொருளைக் காண்பதை ‘அபவாதம்’ என்பர். ஆரோபம் ‘நாரூடு பணியாய்த் தோன்றல்!’ என்றும், அபவாதம் ‘அரவன்று, கயிறு என்றாற்போல்.... புரமன்று, புவனமன்று பூதங்கள் அன்று பிரம்மம் என்று தெளிவதே!’ என்றும் கைவல்ய நவநீதம் கூறும். நக்கீரர்,‘கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைவர்’ என்றார் (முருகு 134- 135) கவிச்சக்கரவர்த்தி மறைகளுக்கு இறுதியாவார் என்றார். மறைகளுக்கு இறுதியாவார் - உபநிடதமாக இருக்கும் ஞானிகள் - (எழுவாய்) முன்னோர்கள், இலங்கையில் பொருதார் மறைகளுக்கு இறுதியாவார் என்று பொருள் கொண்டனர். ‘எல்லாப்பொருளும் இராமபிரான்’ என்று தமிழ் வேதம் பேசும். ‘ஊனின் மேய ஆவி நீ, உறக்கமோ டுணர்ச்சி நீ. ஆனின் மேய ஐந்தும் நீ, அவற்றுள் நின்ற தூய்மை நீ, யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே’ என்பது திருச்சந்த விருத்தம். (பிரபந்தம் - 845) பண்பும் பண்பியும், இவற்றுக்கு மூலகாரணமாகிய பூதங்களும் இவற்றுக்கு மூலப் பொருளாகிய இறைவனும் இராமபிரான் என்பது அப் பாசுரத்தின் உட்கருத்து. உலகஇதிகாசங்களில் முதன்மை வகிக்கும் இராமாயணம் ஏழு காண்டங்களைத் தன்னகத்தே கொண்டது. ஒரு காண்டம் பருவத்தாலும் (பால) மூன்று காண்டங்கள் இடத்தாலும் (அயோத்தி, ஆரண்ய, கிட்கிந்தா) ஒரு காண்டம் செயலாலும் (யுத்த) இரு காண்டங்கள் பண்பாலும் (சுந்தர, உத்தர) பெயர் பெற்றுள்ளன. தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் உத்தர காண்டம் பாடவில்லை. இராமாயணத்துக்குள் சுந்தரத்தைப் பற்றிப் பேசுவதால் அக்காண்டம் சுந்தர காண்டம் எனப்பெயர் பெற்றது. அதனால் அது உயர்ந்தது என்பர். பெருமான் மன்னுயிர் வாழ உலகில் அவதரித்தலைக் கூறும் பால காண்டத்தைவிட, இளவலுக்கு அரசு தந்து தியாக மூர்த்தியாய்க் காடேகும் அண்ணலைப் பற்றிக் கூறும் அயோத்தியா காண்டத்தைவிட, தேவர் சிறை மீட்பதற்காகப் பிராட்டி சிறைபுகுதலைப் பற்றிக் கூறும் ஆரண்ய காண்டத்தைவிட, அறத்தைக் காக்க வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன் கீழே இறங்கிய இராகவன் வாலியைக் |