பக்கம் எண் :

222சுந்தர காண்டம்

     இந்தச்சத்துருவான அரக்கரைக் கொல்லாமல் வெறுமே சாகேன்
என்பது பழையவுரை (அடை -பதி).                            (227)

5062.

“கண்ணியநாள் கழிந்துளவால்;
     கண்டிலமால்கனங்குழையை
விண்ணடைதும்”என்றாரை
     ஆண்டுஇருத்தி விரைந்த யான்,
எண்ணியதுமுடிக்ககிலேன்!
     இனி முடியாதுஇருப்பேனோ ?
புண்ணியம் என்றுஒருபொருள்
     என்னுழைநின்றும் போயதால்.

     கண்ணியநாள் -(சுக்கிரீவனால்) குறிப்பிட்ட நாள்; கழிந்துள -
கடந்தபடியுள்ளன; கனங்குழையை - சீதாபிராட்டியை; கண்டிலம் -
கண்டோம் இல்லை (ஆதலால்); விண் அடைதும் -  இறந்த விண்ணுலகத்தை
அடைவோம்; என்றாரை - என்று கூறிய அங்கதன் முதலானவரை; ஆண்டு
-
அந்த மகேந்திரமலையில்; இருத்தி - உயிரோடு வாழச்செய்து; விரைந்த
யான் -
வேகமாக இலங்கையை அடைந்த யான்; எண்ணியது - கருதிய
செயலை; முடிக்ககிலேன் - நிறைவேற்றினேன் இல்லை; இனி - இப்போது;
முடியாது -
இறவாமல்; இருப்பேனோ -  உயிருடன் வாழ்வேனோ;
புண்ணியம் என்று -
அறம் என்று பேசப்படும்; ஒருபொருள் - ஒப்பற்ற
பொருள்; என் உழைநின்றும் - என்பக்கத்திலிருந்து; போயது -
நீங்கிவிட்டது.

     தர்மம் என்னும்புனிதப்பொருள் என்னை விட்டு நீங்கி விட்டது.
கழிந்துளவால்,போயதால் என்பனவற்றில் உள்ள ஆல் அசை.
கனங்குழை - ஆகுபெயர் என்பர் அழகர். அன்மொழித்தொகை என்பர்
முனிவர்.                                              (228)

5063..

ஏழு நூறுஓசனை சூழ்ந்து
     எயில்கிடந்தது இவ் இலங்கை
வாழும் மா மன்உயிர், யான்
     காணாதமற்று இல்லை;
ஊழியான்பெருந்தேவி
     ஒருத்தியுமேயான் காணேன்
ஆழி தாய், இடர்- ஆழியிடையே
     வீழ்ந்துஅழிவேனோ ?