உருகிவிழ - உருகிவிழும்படி;வெந்தழலால் - கொடிய நெருப்பினாலே (இந்த ஊரை); வேய்கேனோ - மூடுவேனோ (எதைச் செய்வது). (230) 5065. | வானவரேமுதலோரை வினவுவெனேல், வல் அரக்கன் தான் ஒருவன்உளன் ஆக உரைசெய்யும் தருக்கு இலரால்; ஏனையர்கள்எங்கு உரைப்பார் ? எவ்வண்ணம்தெரிகேனோ ? ஊன் அழியநீங்காத உயிர்சுமந்த உணர்வில்லேன். |
ஊன் அழிய - ஊனால்ஆகிய இவ்வுடம்பு தளர்ச்சியடைய; நீங்காத - இவ்வுடலை விட்டு விலகிப் போகாத; உயிர் சுமந்த - உயிரைத் தாங்கிக் கொண்டுள்ள; உணர்வில்லேன் - அறிவற்ற யான்; வானவரே முதலோரை - தேவர் முதலாகியவரை; வினவுவனேல் - (பிராட்டியைப் பற்றி) கேட்டால்; வல் அரக்கன் தான் ஒருவன் உளன் ஆக - வலிய இராவணனாய ஒருவன் இருக்க; உரை செய்யும் - பிராட்டியைப் பற்றி எடுத்துக்கூறும்; தருக்கு இலர் - வலிமை அற்றவர்; ஏனையவர்கள் - (அத் தேவரினும் தாழ்ந்த) பிற மக்கள்; எங்கு உரைப்பார் - எப்படிக் கூறுவார்கள்; எவ்வண்ணம் தெரிகேன் - எப்படிப் பிராட்டியிருக்குமிடத்தை ஆராய்வேன். தருக்கு - வலிமை.அரக்கர் - சிதைவு எய்தித் தருக்கு அழிவுற (அகத்தியப் 54) தருக்கிலரால் - ஆல் - அசை தேவர்களின் ஆற்றலின்மையை முனிவர்கள் வாக்கால் உணரலாம் (கம்ப. 2645) பிரம்மதேவனும் ஆற்றல் அற்றவன் என்பதை ‘கமலத்தானே முதலினர் தலைபத்து உள்ளாற்கு ஆட் செய்கின்றார்கள்’ என்னும் சடாயு மொழிகளால் (கம்ப. 3524) அறிக. (231) 5066. | எருவைக்கு முதலாய சம்பாதி‘இலங்கையில் அத் திருவைக்கண்டனென்’ என்றான் அவன்உரையும் சிதைந்த தால்; கருவைக்கும்நெடுநகரைக் கடலிடையேகரையாதே |
|